ஐபிஎல் 2019, மேட்ச் 29, KKR vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

MSD vs DK
MSD vs DK

புள்ளி அட்டவனையில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியை 2019 ஐபிஎல் தொடரின் 29 போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று எதிர்கொள்ள இருக்கிறது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 13 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஈடன் கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 8 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இரண்டுமே தலா 4 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.

2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் முந்தைய நேருக்கு நேர்: இந்த வருட ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஏப்ரல் 9 அன்று மோதின. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் 17.2 ஓவர்கள் முடிவில் அடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai super kings
Chennai super kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி அட்டவனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த வருட சீசனில் விளையாடிய 7 லீக் போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது சென்னை. கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நோ-பால் சர்சையால் சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி கள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒருமுறை வென்று புள்ளி அட்டவனையில் முதலிடத்தை சென்னை அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ஃபேப் டுயுபிளஸ்ஸி, அம்பாத்தி ராயுடு

எம்.எஸ்.தோனி இந்த வருட ஐபிஎல் சீசனில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். 6 போட்டிகளில் பங்கேற்று 214 ரன்களை எடுத்து 3 முறை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பாக அதிக ரன்களை எடுத்த எம்.எஸ்.தோனி இதே ஆட்டத்திறனை கொல்கத்தா அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது. ஃபேப் டுயுபிளஸ்ஸி மற்றும் அம்பாத்தி ராயுடு சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தி வருகின்றனர். எதிரணிக்கு இருவரில் ஏதேனும் ஒருவர் சிறந்த ஆட்டத்திறனுடன் ஆட்டத்தை வெளிபடுத்துகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷேன் வாட்சன் ஆட்டத்திறனை கவணித்து வருகிறது. ஏனெனில் இந்த சீசனில் சிறப்பான இன்னிங்ஸ் அவரிடமிருந்து இன்னும் வெளிபடாமலேயே உள்ளது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: தீபக் சகார், இம்ரான் தாஹீர்

தீபக் சகார் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இந்த சீசனில் இவர்கள் எடுத்த விக்கெட்டுகள் முறையே 10, 9 ஆகும். கொல்கத்தா அணிக்கு எதிராகவும் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்துல் தாகூர் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் பவர்பிளே மற்றும் டெத் ஓவரில் தோனியின் துருப்பு சீட்டாக உள்ளனர்.

உத்தேச XI: ஷேன் வாட்சன், ஃபேப் டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஸ்காட் குஜ்லெஜின், இம்ரான் தாஹீர், தீபக் சகார், ஷர்துல் தாகூர்.

கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்

Kolkata Knight riders
Kolkata Knight riders

கொல்கத்தா அணி சென்னை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு பதிலடி தரும் விதமாக இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி களமிறங்கும் என தெரிகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா

ஆன்ரிவ் ரஸல் கொல்கத்தா அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். இந்த சீசனில் 303 ரன்களை குவித்து 100.66 என்ற அற்புதமான சராசரியை தன்வசம் வைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இவர் மட்டுமே நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். எனவே இன்றைய போட்டியில் இவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.

ராபி உத்தப்பா மற்றும் நிதிஷ் ராணா கொல்கத்தா அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் இவர்களது அதிரடி தொடரும். சுப்மன் கில் டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 65 ரன்களை எடுத்தார். எனவே இன்றைய போட்டியிலும் ஒரு நல்ல தொடக்கத்தை இவர் கொல்கத்தா அணிக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: குல்தீப் யாதவ், ஆன்ரிவ் ரஸல், ப்யுஸ் சாவ்லா

ஆன்ரிவ் ரஸல் இந்த சீசனில் கொல்கத்தா அணி சார்பில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்தாக ப்யுஸ் சாவ்லா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இன்றைய போட்டியில் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை தங்களது பௌலிங்கில் இவர்கள் இருவரும் அளிப்பார்கள் என தெரிகிறது. குல்தீப் யாதவ் மற்றும் சுனில் நரைன் இந்த சீசனில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளனர். எனவே அணியின் கேப்டன் சென்னை அணிக்கு எதிராக இவர்களின் இயல்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்.

உத்தேச XI: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஆன்ரிவ் ரஸல், குல்தீப் யாதவ், ப்யுஸ் சாவ்லா, பிரஸித் கிருஷ்ணா, ஹாரி குர்னே.

Quick Links

App download animated image Get the free App now