கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் வெற்றிகளை குவிக்கும் நோக்கில் 2019 ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் இன்று சந்திக்க உள்ளது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 26 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 17 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 8 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது
2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் முந்தைய நேருக்கு நேர்: இந்த வருட ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் மார்ச் 29 அன்று மோதின. இந்த போட்டியில் பல்வேறு சர்சைகளுக்கிடையே மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. பதிலடியாக ஏபி டிவில்லியர்ஸ் 70 ரன்களை அதிரடியாக விளாசினார். இருப்பினும் அந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தது. லாசித் மலிங்கா வீசிய ஆட்டத்தின் இறுதி பந்தை நோ-பாலாக வீசினார். ஆனால் களநடுவர் நோ-பால் தரவில்லை. பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தனது வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ரோகித் சர்மா, டிகாக், கீரன் பொல்லார்ட்
டிகாக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 81 ரன்களை விளாசினார். அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா இவருடன் கைகோர்த்து 47 ரன்களை எடுத்தார். எனவே இவர்கள் இருவரும் ஒரு சிறந்த ஆட்டத்திறனை பெங்களூரு அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்கள் என தெரிகிறது.
கீரன் பொல்லார்ட் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது விக்கெட்டை இழந்தார். பவர் ஹீட்டரான இவர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரிடியை வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் எதிரணிக்கு நெருக்கடியை அளிக்கும் திறமை படைத்துள்ளார்கள்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஜாஸ்பிரிட் பூம்ரா, லாசித் மலிங்கா
மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங்கில் ஜாஸ்பிரிட் பூம்ராவையே பெரிதும் நம்பியுள்ளது. இந்த சீசனில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவருக்கு துனை நின்று பந்துவீச யாரும் இல்லை. ராகுல் சகார் மற்றும் ஜேஸன் பெஹாரன்ஆஃப் ஆகியோர் ஓரளவிற்கு இவருக்கு துனை நின்றாலும் அணி நிர்வாகம் எதிர்பார்த்த அளவிற்கு இவர்களது பௌலிங் இல்லை. இலங்கையின் சூப்பர் புரொவிஸ்னல் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார் மலிங்கா. எனவே லாசித் மலிங்கா பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் XI-ல் இடம்பிடித்து பூம்ராவிற்கு துனைநின்று பந்துவீசுவார் என தெரிகிறது.
உத்தேச XI: ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டிகாக்(விக்கெட் கீப்பர்)/ஈவின் லிவிஸ், சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங்/இசான் கிஷான், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, ராகுல் சகார், ஜாஸ்பிரிட் பூம்ரா, ஜேஸன் பெஹாரன்ஆஃப், அல்ஜாரி ஜோசப்/லாசித் மலிங்கா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 2019 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி அந்த அணி வீரர்களுக்கு இனிவரும் போட்டிகளிலும் வெற்றி பெறும் நம்பிக்கையை அளித்துள்ளது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல்
விராட் கோலி இந்த சீசனில் இதுவரை 270 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் கடைசியாக அவர் விளையாடிய 3 போட்டிகளின் ரன்கள் முறையே 84, 41, 67 ஆகும். இதன்மூலம் விராட் கோலி சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. ஏபி டிவில்லியர்ஸ் 232 ரன்களுடன் பெங்களூரு அணியின் 2வது அதிக ரன்களை விளாசியுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. எனவே இவர்களது இருவரின் ஆட்டம் இனிவரும் போட்டிகளிலும் வெளிபடும் என தெரிகிறது. இவர்களை தவிர மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் பார்தீவ் படேல் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை பெங்களூரு அணிக்காக வெளிப்படுத்தி வருகின்றனர்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: யுஜ்வேந்திர சகால், முகமது சிராஜ், உமேஷ் யாதவ்
யுஜ்வேந்திர சகால் இந்த சீசனில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார். முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை இந்த சீசனில் வீழ்த்தியுள்ளார். பெங்களூரு அணி பௌலிங்கில் இவர்கள் இருவரையே நம்பியுள்ளது. சில கால இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இருவரும் வல்லவராக உள்ளனர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இருப்பினும் டெத் ஓவரில் இவரது அனுபவம் பெங்களூரு அணிக்கு மிகவும் கை கொடுக்கும்.
உத்தேச XI: பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மொய்ன் அலி, அக்ஸிப் நாத், பவான் நெகி, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், யுஜ்வேந்திர சகால், முகமது சிராஜ்.