ஐபிஎல் 2019, மேட்ச் 32, KXIP vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Ashwin and Rahane

வெற்றி பாதைக்கு மீண்டும் திரும்பும் நோக்கில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 2019 ஐபிஎல் தொடரின் 32வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏப்ரல் இன்று பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஐ.எஸ்.பிந்ரா மைதானத்தில் சந்திக்க உள்ளது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 18 முறை நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளிலும், கிங்ஸ் XI பஞ்சாப் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 6 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் தலா 3 முறை வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றனர்.

2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் முந்தைய நேருக்கு நேர்: மார்ச் 25 அன்று இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மான்கட் விவகாரத்திற்கு உள்ளாக்கப்பட்டு பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. இந்த போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

கிங்ஸ் XI பஞ்சாப்

Kings XI Punjab
Kings XI Punjab

பஞ்சாப் அணி ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த நிலையில், தற்போது விளையாடிய கடைசி 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. 2018 ஐபிஎல் தொடரை போல் அல்லாமல் இந்த வருட ஐபிஎல் சீசனில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் நோக்கில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி களமிறங்கும் என தெரிகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால்

கிறிஸ் கெய்ல் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை விளாசிய டேவிட் வார்னரின் ரன்களை(400) முந்த கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புள்ளது.

மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான் மற்றும் சாம் கர்ரான் கடந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் இவர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: முகமது ஷமி, முஜீப் யுர் ரகுமான், ரவிச்சந்திரன் அஸ்வின்

முகமது ஷமி மற்றும் ரவீந்திரன் அஸ்வின் பஞ்சாப் அணிக்காக தொடர்ந்து சீரான பந்துவீச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் ஷமி 10 விக்கெட்டுகளையும், அஸ்வின் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இன்றைய போட்டியில் முஜீப் யுர் ரகுமானை பஞ்சாப் அணி ஆடும் XI-ல் கொண்டு வர முயற்சிக்கும். ராஜஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ள கைத்தேர்ந்த பேட்ஸ்மேன்கள் என யாரும் இல்லை.

உத்தேச XI: கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), முகமது ஷமி, சாம் கர்ரான், ஹர்துஸ் வில்ஜியோன், முருகன் அஸ்வின்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

Rajasthan royals
Rajasthan royals

ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 2018 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் பெரிதும் சர்ச்சைக்குரிய முறையில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியிடம் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பதிலடி தரும் விதமாக இன்றைய போட்டியில் களமிறங்கும் என தெரிகிறது

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், ஸ்டிவன் ஸ்மித், சஞ்சு சாம்சன்

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் அதிக ரன்களை விளாசிய ஜாஸ் பட்லர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் தொடரில் தனது அதிகபட்ச ரன்னாக 89-ஐ குவித்தார். இவரது இந்த அடிதளத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திறனை பஞ்சாப் அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது.

ஸ்டிவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், அஜின்க்யா ரகானே ஆகயோர் ராஜஸ்தான் அணியின் மற்ற முன்னனி பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் இந்த சீசனில் ஆரம்பத்தில் விளையாடிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தற்போது பஞ்சாப் அணி சுமாரான ஆட்டத்திறனுடன் திகழ்வதால் ராஜஸ்தான் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரெயஸ் கோபால், தவால் குல்கர்னி

ஜோஃப்ரா ஆர்சர் கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பவர்பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்த திட்டமிடுவார்.

ஸ்ரெயஸ் கோபால் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார். இந்த சீசனில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவரது சுழற்பந்து வீச்சை இனிவரும் போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ் இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் கடந்த போட்டியில் பங்கேற்கவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இவர் களமிறங்க வாய்ப்புள்ளது. உனட்கட் டெத் ஓவரில் ரகானேவின் துருப்புச் சீட்டாக செயல்படுகிறார்.

உத்தேச XI: அஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திர்பாதி, ஸ்டிவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ்/ஆஸ்டன் டர்னர், கிருஷ்ணப்பா கௌதம், ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரெயஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி.

Quick Links