ஐபிஎல் 2019, மேட்ச் 33, SRH vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

MSD vs Kane Williamson
MSD vs Kane Williamson

2019 ஐபிஎல் தொடரின் மேட்ச் 33ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று மோத உள்ளன. தொடர் வெற்றிகளை குவித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 10 முறை நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளிலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 3 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டிகளிலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன

சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai super kings
Chennai super kings

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் சீசனில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளது. தங்களை வீழ்த்த எதிரணிக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான கடந்த கால போட்டிகளின் சாதனைகளை வைத்து பார்க்கும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே சாதகமாக இருந்துள்ளதால் இந்த போட்டியும் அவ்வாறே அமையும் என தெரிகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ஃபேப் டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா 58 ரன்களை விளாசினார். எனவே இதே ஆட்டத்திறனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது. அத்துடன் எம்.எஸ்.தோனி(6 இன்னிங்ஸில் 230 ரன்கள்), ஃபேப் டுயுபிளஸ்ஸி (4 இன்னிங்க்ஸில் 128 ரன்கள்), கேதார் ஜாதவ் (7 இன்னிங்க்ஸில் 135 ரன்கள்), அம்பாத்தி ராயுடு (7 இன்னிங்க்ஸில் 138 ரன்கள்) ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர். அனைவரும் நல்ல ஆட்டத்திறனுடன் திகழ்வதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் இதே ஆட்டத்தை சிறப்பாக வெளிபடுத்துவர் என தெரிகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: இம்ரான் தாஹீர், தீபக் சகார், ஷர்துல் தாகூர்

இம்ரான் தாஹீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி 161 ரன்களுக்குள் சுருட்டினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இவர் 2வது இடத்தை பிடித்தார். தீபக் சகார் சென்னை அணிக்காக சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு இந்த சீசனில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். ஷர்துல் தாகூர் பவர் பிளேவில் தோனியின் துருப்பு சீட்டாக உள்ளார்

உத்தேச XI: முரளி விஜய், ஃபேப் டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு/கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், ஸ்காட் குஜ்லெஜின், தீபக் சகார், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹீர்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

Sun Risers Hyderabad
Sun Risers Hyderabad

இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த ஆட்டத்துடன் தொடங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 3 போட்டிகளுமே தோல்வியை தழுவியுள்ளது. எனவே அணியில் உள்ள குறைகளை களைந்து வலிமையான அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும். கடந்த தொடரின் இறுதி போட்டியில் தங்களை வீழ்த்திய சென்னை அணியை பழிதீர்க்கும் நோக்கில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று களமிறங்க உள்ளது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், கானே வில்லியம்சன்

டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முண்ணனி தொடக்க வீரர்களாக உள்ளனர். இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இவர்கள் இருவரும் உள்ளனர். எனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு அதிரடி ஆட்டத்தை இவர்களிடமிருந்து அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அணியின் கேப்டன் கானே வில்லியம்சன் கடந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த சொதப்பியிருந்தாலும் சென்னை அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை கானே வில்லியம்சன் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ரஷீத் கான், கலீல் அகமது, புவனேஸ்வர் குமார்

கலீல் அகமது டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் களமிறங்கி 4 ஓவர்களை வீசி 30 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே சென்னை அணிக்கு எதிராகவும் பவர்பிளேவில் இவரது விக்கெட் வீழ்த்தும் திறன் வெளிபடும் என தெரிகிறது. புவனேஸ்வர் குமாரும் கடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் சென்னை அணியின் பேட்டிங்கை தனது வேகத்தில் தடுமாற செய்வார் என பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் சந்தீப் சர்மா 8 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்களது ஆட்டம் சீராக உள்ள காரணத்தால் சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை இவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.

உத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கானே வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யுசப் பதான், தீபக் ஹேடா, அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா

Quick Links