சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி பெரோஸா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடியது. பின்னர் மிடில் ஓவரில் ஒருசில விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 15 ஓவர் முடிவில் 120 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் அடுத்த 5 ஓவரில் சென்னை அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணியால 17 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டு 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் என்ற குறைந்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்தது டெல்லி கேபிடல்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்பிளேவில் ஒரு விக்கெட்டை இழந்திருந்தாலும் சிறப்பான அதிரடியை வெளிபடுத்தியது. ஷேன் வாட்சன், ரெய்னா, தோனி ஆகியோரது பங்களிப்பினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4வது ஓவரில் இலக்கை எட்டியது. டுயன் பிரவோ ஆட்டத்தை பவுண்டரியுடன் முடித்து வைத்தார். இக்கட்டான சூழ்நிலையில் தோனியின் 32 ரன்கள் அணியின் வெற்றிக்கு நம்பிக்கையை அளித்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி அட்டவனையில் முதலிடத்தை பிடித்தது.
இந்தப் போட்டியில் சில முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டன. அதைப் பற்றி நாம் இங்கு காண்போம்.
எம்.எஸ்.தோனி ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசியோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் தனது 187வது ஐபிஎல் சிக்ஸரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அமித் மிஸ்ரா வீசிய ஓவரில் அடித்தார். கிறிஸ் கெய்ல் 296 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசியோர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 3வது இடத்தை ஏபி.டிவில்லியர் உடன் பகிர்ந்து கொண்டார். இவர் ஐபிஎல் தொடரில் 186 சிக்ஸர்களை விளாசியுள்ளார.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 2 முறை 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டும் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் காகிஸோ ரபாடா, காலின் இன்கிராம், கீமோ பால் ஆகியோருடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷேன் வாட்சன், டுயன் பிரவோ, இம்ரான் தாஹீர் ஆகியோருடன் களமிறங்கியது.
இதற்கு முன் 2017 ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அணியும் 3 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கினர்.
2018 ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 5லும் தொடர்சியாக வென்றுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங்கில் கடைசி ஓவர் வரை 44 போட்டிகளில் விளையாடி 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அமித் மிஸ்ரா சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபிக்கும் விதமாக டெல்லி பெரோஸா கோட்லா மைதானத்தில் தனது 50 விக்கெட்டை சென்னை அணியுடனான போட்டியில் வீழ்த்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணிக்கு எதிராக எம்.எஸ்.தோனி 500 ரன்களை குவித்துள்ளார்.