மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தோல்வி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பு க்குள் அடி எடுத்து வைக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே, உலகக்கோப்பை முன்னேற்பாடுகளால் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது தாய் நாட்டிற்கு திரும்பி உள்ளனர். இவர்கள் இருவரும் ஐதராபாத் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தனர். கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரரான மணிஷ் பாண்டேவின் பேட்டிங்கையே ஹைதராபாத் அணி மலை போல் நம்பி உள்ளது. மேலும், ஆல்ரவுண்டர் முகமது நபி, கனே வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங்கில் சற்று நம்பிக்கை அளிக்கின்றனர்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் மழை வந்து குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவில்லாமல் போனது. எனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணியாக உள்ளது, பெங்களூரு அணியில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரை தவிர்த்து பார்த்தீவ் பட்டேல், நவ்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சற்று நம்பிக்கை அளிக்கின்றனர் இன்றைய ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருப்பதால் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தங்களது இறுதி போட்டியை வெற்றியோடு முடிக்கும் முனைப்பில் களமிறங்கவுள்ளது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முக்கிய வீரர்கள்:
ஏ.பி.டிவில்லியர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ்:
பெங்களூரு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டிவில்லியர்ஸ் பங்கேற்கும் முதலாவது ஐபிஎல் தொடர் பெங்களூர் அணிக்கு சற்று தோல்வியில் முடிந்துள்ளது. மேலும், லெக் ஸ்பின்னில் சற்று தடுமாறும் டிவிலியர்ஸ், ராஜஸ்தான் பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலிடம் இருமுறை தனது விக்கெட்டை இழந்துள்ளார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டியில் விளையாடி 441 ரன்களை குவித்துள்ளார்.
மணிஷ் பாண்டே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு பிறகு ஹைதராபாத் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார், மனிஷ் பாண்டே. நடப்பு ஐபிஎல் தொடரை இவர் சிறப்பாக தொடங்க விட்டாலும் பின் வந்த ஆட்டங்களில் அபாரமாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார்.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மார்ட்டின் கப்தில், விருத்திமான் சஹா, வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், முகமது நபி, அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது மற்றும் சந்தீப் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ்:
பார்த்தீவ் பட்டேல், விராத் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், காலின் டி கிராந்தோம், குர்கீரத் சிங், கிளாசன், பவன் நேகி, உமேஷ் யாதவ் நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கெஜர்லியோ.