ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 7வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று(மார்ச் 28) நடைபெறவுள்ள. பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியிடம் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே இரு அணிகளும் இவ்வருட ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: ஐபிஎல் வரலாற்றில் மும்பை, பெங்களூரு அணிகள் 25 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சின்னசாமி மைதானத்தில் நேருக்கு நேர்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் தனது சொந்த மண் பெங்களூரு அணிக்கு ஏற்றதாக இல்லை. இதுவரை 9 போட்டிகளில் இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதியுள்ளன. அதில் 2 போட்டிகளில் மட்டுமே பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.
கள ரிப்போர்ட்: சின்னசாமி மைதானம் ஒரு தட்டையான மற்றும் ஷார்ட் பவுண்டரிகள் விளாச ஏற்ற மைதானம். குறிப்பாக இந்த மைதானத்தில் டி20 போட்டிகள் நடந்தால் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மூன்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு மைதானத்தில் சில சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: டிகாக், ரோகித் சர்மா, யுவராஜ் சிங்
டிகாக் (16 பந்துகளில் 27 ரன்கள்) மற்றும் ரோகித் சர்மா(13 பந்துகளில் 14 ரன்கள்) டெல்லி அணியுடனான முதல் போட்டியில் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். ஆனால் நீண்ட நேரம் இந்த ஆட்டம் நீடிக்கவில்லை. இந்த தொடக்க ஆட்டக்காரர்கள் பெங்களூரு அணியுடனான போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவராஜ் சிங் டெல்லி அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடினார். இவர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார். இவரது ஆட்டம் வரும் போட்டிகளில் தொடர்ந்தால் இந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக பார்க்கப்படுவார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் உலகின் சிறந்த 3 ஆல்-ரவுண்டர்களான கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா ஆகியோர் உள்ளனர். இவர்கள் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தும் திறமை படைத்துள்ளனர்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: மிட்செல் மெக்லகன், லாசித் மலிங்கா, பும்ரா
டெல்லி அணியுடனான போட்டியில் மெக்லகன் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்தை சேர்ந்த இவர் பெங்களூரு அணியுடனான போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாஸ்பிரிட் பூம்ராவிற்கு முதல் போட்டியில் தோல் பட்டையில் அடி பட்டது. வேகப் பந்து வீச்சாளரான இவர் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
லெக் சுழற்பந்து வீச்சாளரான மயன்க் மார்கண்டே பெங்களூரு அணியுடனான போட்டியில் மிடில் ஓவரில் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிப்பார்.
உத்தேச XI:
ரோகித் சர்மா (கேப்டன்), டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்ட், மிட்செல் மெக்லகன், க்ருநல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, லாசித் மலிங்கா, மயன்க் மார்கண்டே, ஜாஸ்பிரிட் பூம்ரா
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூரு அணி, சென்னை அணியுடனான தனது முதல் போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை தழுவியது. குறிப்பாக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் மிகவும் தடுமாறினர்.
பெங்களூரு அணியின் சாதனைகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவ்வளவாக இல்லை. இருப்பினும் தனது சொந்த மண் என்ற காரணத்தால் வெற்றி வாய்ப்பு மும்பை அணியை விட பெங்களூரு அணிக்கே அதிகம் உள்ளது.
பேட்டிங்:
நட்சத்திர வீரர்கள்: பார்திவ் படேல், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ்
பார்திவ் படேல் மட்டுமே சென்னை அணியுடனான முதல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளை சமாளித்து இரட்டை இலக்க ரன்களை எடுத்தார். இவர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை எடுத்தார். இதே ஆட்டத்திறனை மும்பை அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்.
அத்துடன் ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, ஷிம்ரன் ஹட்மயர் ஆகிய டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் மும்பை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரு அணியின ரன்களை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
பௌலிங்:
நட்சத்திர வீரர்கள்: யுஜவேந்திர சகால், உமேஷ் யாதவ், டிம் சௌதி
சென்னை அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியின் 70 ரன்களை 17 ஓவர்களில்தான் சேஸ் செய்தது. இதன் மூலம் பெங்களூரு அணியின் பௌலிங் வலியையாக உள்ளது என நமக்கு தெரிகிறது. சென்னை அணி இந்த ரன்களை அடிக்க மிகவும் கஷ்டப்பட்டது. யுஜ்வேந்திர சகால் 4 ஓவர் வீசி 6 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதே சிறப்பான பந்துவீச்சை மும்பை அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் உமேஷ் யாதவிற்கு விக்கெட் விழவில்லை. 2018 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் 20 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகித்தார உமேஷ் யாதவ். எனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க விக்கெட்டுகளை தனது பந்துவீச்சில் வீழ்த்துவார் என பார்க்கப்படுகிறது.
உத்தேச XI:
பார்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹட்மயர், மொய்ன் அலி, சிவம் தூபே, காலின் டி கிரான்ட் ஹோம், உமேஷ் யாதவ், யுஜ்வேந்திர சகால், நவ்தீப் சய்னி, முகமது சிராஜ்.