டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் கோட்லா மைதானத்தில் 2019 ஐபிஎல் தொடரின் 37-வது போட்டியில் இன்று மோத உள்ளன. இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளி அட்டவனையில் நடுப்பகுதியில் உள்ளனர்.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 23 முறை நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 14 போட்டிகளிலும், டெல்லி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
கோட்லா மைதானத்தில் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 10 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன
2019 ஐபிஎல் தொடரில் முதல் நேருக்கு நேர்: இவ்வருட ஐபிஎல் தொடரின் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய முதல் லீக் போட்டி ஏப்ரல் 8 அன்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த கிங்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் சொதப்பலால் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டெல்லி கேபிடல்ஸ்
தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்த டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் வெற்றி பாதைக்கு டெல்லி கேபிடல்ஸ் திரும்பும் என தெரிகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஷீகார் தவான், ஸ்ரெயஸ் ஐயர், பிரித்வி ஷா
எதிர்பாராத பேட்டிங் சொதப்பல்களால் தொடர்ந்து 4வது வெற்றியை பெற டெல்லி கேபிடல்ஸ் தவறிவிட்டது. கடந்த போட்டியில் ஷீகார் தவான் 22 பந்துகளில் 35 ரன்களை விளாசினார். பிரித்வி ஷா (24 பந்துகளில் 20 ரன்கள்) மற்றும் அக்ஸர் படேல் (23 பந்துகளில் 26 ரன்கள்) ஆகியோர் கடந்த போட்டியில் 20 ரன்களை கடந்தனர். இவர்களை தவிர டெல்லி முண்ணனி பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட், ஸ்ரெயஸ் ஐயர், காலின் முன்ரோ ஆகியோர் கடந்த போட்டியில் ஒற்றை இலக்கங்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இந்த குறைகளை நிச்சயமாக டெல்லி வீரர்கள் களைய வேண்டும்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா
காகிஸோ ரபாடா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். எனவே இதனை தக்க வைக்கும் வகையில் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது யார்கர் பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை தடுமாற செய்வார். கிறிஸ் மோரிஸ் (11 விக்கெட்டுகள்) டெல்லி அணியில் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல் சிறந்த எகனாமிக்கல் பௌலராகளாக உள்ளனர். இருப்பினும் கேப்டன் இவர்களிடமிருந்து சில விக்கெட்டுகளை எதிர்பார்க்கிறார்.
உத்தேச XI: ஷீகார் தவான், பிரித்வி ஷா, காலின் முன்ரோ, ஸ்ரெயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் மோரிஸ், அக்ஸர் படேல், சந்தீப் லாமிச்சனே/கீமோ பால், அமித் மிஸ்ரா, காகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா
கிங்ஸ் XI பஞ்சாப்
பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. எனவே இதே ஆட்டத்திறனை டெல்லி அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்தி மற்றுமொரு வெற்றியை பெறும் என நம்பப்படுகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால்
கே.எல்.ராகுல் ஒரு சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு 387 ரன்களுடன் இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 9 போட்டிகளில் பங்கேற்று 358 ரன்களை எடுத்துள்ளார். எனவே பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெல்லி அணிக்கு எதிராக ஒரு சிறப்பான பேட்டிங்கை தொடக்கத்தில் வெளிபடுத்துவார்கள் என தெரிகிறது.
டாப் ஆர்டர் சொதப்பினால் மயான்க் அகர்வால் (225 ரன்கள்), டேவிட் மில்லர் (171 ரன்கள்) ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி
சாம் கர்ரான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 11 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது இந்த பௌலிங் ஆட்டத்தின் வெற்றியை பஞ்சாப் வசம் மாற்றியது. ஆல்-ரவுண்டரான இவர் மீண்டும் தனது இயல்பான பந்துவீச்சை மேற்கொள்வார் என தெரிகிறது.
முகமது ஷமி (12 விக்கெட்டுகள்) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (11 விக்கெட்டுகள்) ஆகியோர் பஞ்சாப் அணியின் நட்சத்திர பௌலர்களாக உள்ளனர். டெல்லி அணிக்கு எதிராக தனது சிறப்பான பௌலிங்கை இவர்கள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது. அர்ஸ்தீப் சிங் ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஜாஸ் பட்லர் மற்றும் ரகானே ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடும் XI-ல் தேர்வு செய்யப்பட்டால் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
உத்தேச XI: கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), அர்ஸ்தீப் சிங்/முருகன் அஸ்வின், முகமது ஷமி, சாம் கர்ரான், முஜீப் யுர் ரகுமான்.