ஐபிஎல் போட்டி 2019 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எதிர்ப்பார்க்கப்படும் ஆடும் லெவன்

Mumbai Indians will be looking to get back to winning ways against RCB
Mumbai Indians will be looking to get back to winning ways against RCB

சென்னை சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் சென்னை அணியும் ராஜஸ்தானுடன் பெற்ற தோல்வியுடன் மும்பை அணியும் மோத உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது .இந்த வருட ஆரம்ப கட்டத்தில் மும்பை அணி தொடர்ச்சியான இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் , அதற்காக சிறிதும் கவலைப்படாத ரோஹித் சர்மா தனது அணியுடன் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார். ஏற்கனவே, இவ்விரு அணிகளுக்கும் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது இன்னும் இந்த ஆட்டத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றது.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக்:

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும், ரோகித் சர்மா தனது அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றார். நாளைய ஆட்டத்தில் இவரும் டி காக் கும் சேர்ந்து கண்டிப்பாக அணியின் வெற்றிக்காக அடித்தளம் அமைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்: சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷான், கீரோன் பெள்ளார்ட்

அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் தற்போதைய ஆட்டங்களில் பெரிதும் ரன்களை குவிக்கவில்லை. எனினும், இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு இவரது பங்களிப்பு எவ்வாறாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம். இளம் ஆட்டக்காரரான இஷான் கிஷான் இரண்டு போட்டிகளாக விளையாடவில்லை. மேலும், இவர் இடத்தில் பென் கட்டிங் விளையாடி வந்த நிலையில் இன்றைய போட்டியில் இவர் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது. ஆல்ரவுண்டரான பொல்லார்ட் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் அற்புதமாக விளையாடி வருகின்றார். பெரிதும் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத போதிலும் அதிக ரன்களை குவித்த இவர் சென்னை அணிக்கு ஒரு சவாலாகவே இருப்பார்.

ஆல்ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்டியா மற்றும் க்ரூணல் பாண்டியா

சகோதரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ரூணல் பாண்டியா ஆகிய இருவரும் மும்பை அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்திலிருந்தே தங்களுடைய பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றனர். அனைத்து அணிகளுக்கும் பெரும் சவாலாக இருப்பவர், ஹர்திக் பாண்டியா. அசாத்திய திறமை கொண்ட இவர், இந்த சீசனில் அதிரடியாக விளையாடி தனது அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றி வருகிறார்.

மற்றொரு புறம், கடந்த ஆண்டு வரை பவுலிங்கில் மட்டும் திறம்பட விளங்கிய க்ரூணல் பாண்டியா தற்போதைய சீசனில் நல்ல பேட்ஸ்மேனாகவும் விளங்குகின்றார். இன்றைய போட்டியில் இவரது பங்கு கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றே கூறலாம்.

பவுலர்கள் : ராகுல் சாகர் ,மயங்க் மார்க்கண்டே , ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா

தற்போதைய சென்னை சிதம்பரம் மைதானம் ஸ்பின் பவுலர்களுக்கு ஏற்றதாக அமைய வாய்ப்பு உள்ளது. லசித் மலிங்கா , ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். மேலும், இந்த இருவர் கூட்டணி சென்னை அணிக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். அதுமட்டுமன்றி, அசாத்திய பவுலர்களான ராகுல் சாகர் , மார்க்கண்டே போன்றோரும் இருப்பது ஆட்டத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றது. இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மையாகும்.

Quick Links

Edited by Fambeat Tamil