2019 ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றிகள் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்து விட்டனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் மீதமுள்ள நான்காம் இடத்திற்கு வரிந்து கட்டுகின்றனர். முந்தைய சீசன்களை போல இல்லாமல், மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் சிறப்பான தொடக்கத்தை கண்டது. இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் எட்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பது அவர்களின் பந்துவீச்சு செயல்பாடாகும். ஏனெனில், அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா 15 விக்கெட்டுகளும் மலிங்கா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, தங்களது அணியின் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடுகின்றனர்.
ஆனால், அணியில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால் மிடில் ஆர்டர் பேட்டிங் தான். தொடக்க வீரரான குயின்டன் டி காக் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி அடித்தளம் அமைத்துத் தருகிறார். இறுதிக்கட்ட நேரங்களில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை முடித்து வருகிறார். இருப்பினும், அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை சிறப்பாக செயல்படுத்த தவறுகின்றனர்.
யாரை நீக்கி யாரை கொண்டுவருவது?
அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் இன்னும் ஒரு சிறப்பான ஆட்டத்தை தொடங்காமலே இருக்கிறார். இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 பந்துகளை சந்தித்து ஒரு ரன்னை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளில் 15 ரன்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் 32 ஆட்டங்களும் என விரையம் செய்கின்றார். இவர் இதுவரை களமிறங்கியுள்ள 3 போட்டிகளில் மொத்தம் 48 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.
மற்றொரு முனையில் இளம் வீரர் இஷான் கிஷன் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 பந்துகளில் 21 ரன்கள் குவித்தது மட்டுமே நடப்பு சீசனில் இவரது சிறந்த ஆட்டமாக உள்ளது. அதன் பின்னர், எந்த ஒரு ஆட்டத்திலும் இவர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே, லீவிஸ்-க்கு பதிலாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெகன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்பட்ட ஆடும் லெவன் - மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, கீரன் பொல்லார்ட், மிட்செல் மெக்லெகன், ராகுல் சாஹர், பும்ரா மற்றும் லசித் மலிங்கா.