2019 ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவிருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியின் வெற்றியில் பிளே ஆப் சுற்றுக்கான இரு அணிகளின் வாய்ப்பும் அடங்கியுள்ளது. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதவிருக்கின்றன. இதற்கு முந்தைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்திருந்தது. சரியான கலவையுடன் விளங்கும் அணிகளில் ஒன்றாக திகழும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ இல்லாமல் இன்று விளையாட உள்ளது. மொகாலியில் ஏற்பட்ட தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது, கனே வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இருப்பினும், கடந்த சில வாரங்களாக தங்களது தொடர்ச்சியான பங்களிப்பை அளித்து வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ப்ளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய போட்டியை வெல்லும் முனைப்பில் உள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் ஐந்து வெற்றியோடு ஆறாம் இடத்தில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இறுதியாக விளையாடிய இரு போட்டிகளில் அடைந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இன்றைய போட்டியில் வெற்றி வேட்கைக்கு திரும்பும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆட்டத்திற்கு வெற்றியை தேடித்தரும் திறன்பெற்ற வீரர்களாக கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல், டேவிட் மில்லர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்களது கணிசமான பங்களிப்பை இன்றைய போட்டியில் அளிக்க உள்ளனர்.
இதுவரை இந்த மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் செய்த சாதனைகள் வருமாறு, முதலாவதாக பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றவை - 22 போட்டிகள்
முதலாவதாக பவுலிங் செய்யும் அணி வெற்றி பெற்றவை 35 போட்டிகள்
முதலாவது இன்னிங்சில் சராசரி ஸ்கோர் - 156
இரண்டாவது இன்னிங்சில் சராசரி ஸ்கோர் - 148
அதிகபட்ச ஸ்கோர் பதிவானது - 223 / 3 (சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன் ரைஸ் ஹைதராபாத்)
குறைந்தபட்ச ஸ்கோர் பதிவானது - 80 / 10, 19.1 ஓவர் (டெல்லி கேப்பிடல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் )
சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோர் - 217 / 7, 19.5 ஓவர் (ராஜஸ்தான் ராயல்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ்)
நேருக்கு நேர் இதுவரை:
மொத்தம் விளையாடியவை - 13 போட்டிகள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 9 வெற்றிகள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 4 வெற்றிகள்
அணியில் ஏற்படும் மாற்றங்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக ஆடும் லெவனில் முகமது நபி இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
ஹர்துல் வில்ஜோனுக்கு பதிலாக சாம் கரன் மீண்டும் அணியில் இணைவார் என தெரிகிறது. தடுமாறி வரும் மந்தீப் சிங்குக்கு பதிலாக இளம் வீரர் சர்ப்ராஸ் கான் இடம்பெறலாம்.
அணியின் முக்கிய வீரர்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மணிஷ் பாண்டே
டேவிட் வார்னர்
ரஷீத் கான்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
கிறிஸ் கெய்ல்
கே.எல்.ராகுல்
சாம் கரண்
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்,
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே, கனே வில்லியம்சன், விஜய் சங்கர், முகமது நபி, தீபக் ஹூடா, விருத்திமான் சஹா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது மற்றும் சித்தார்த் கவுல்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், நிக்கோலஸ் பூரண், மந்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கரண், முருகன் அஸ்வின், அங்கித் ராஜ்புத், முகமது சமி.