பன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களிலே சிறந்த பந்துவீச்சாக 6/12 என்று இந்த தொடரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, சூப்பர் ஓவர் முதல் ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றி என பல்வேறு விஷயங்கள் இதுவரை இந்த தொடரில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த தொடரானது பல்வேறு சாதனைகளை முறியடிக்கப்படும் களமாகவும் திகழ்ந்து வருகின்றது. உதாரணமாக, கிறிஸ் கெயில் 2013 ம் ஆண்டு நடைபெற்ற புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்களை குவித்தது இதுவரை தகர்க்கப்பட சாதனையாக இருந்து வருகிறது. அதுபோல, இந்த ஆண்டு அதே கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக 300 சிக்சர்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஆகவே, இந்த ஆண்டில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள் பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
#1.ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சிக்சரை அடித்த வீரர் - கிறிஸ் கெய்ல் (59)
இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா வீரர் ரசல், அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார். இவரது பேட்டிங் சராசரி 75ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 220க்கு மேலும் உள்ளது. கடந்த தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற இவர், இந்த நடப்பு தொடரில் 39 சிக்சர்களை அடித்துள்ளார். ஒரு போட்டியில் குறைந்தது ஐந்து சிக்சர்களையாவது இவர் அடித்து விடுகிறார். ஐபிஎல் போட்டிகளில் தனது அசுரத்தனமான ஷாட்களால் ரசிகர்களை கவர்ந்தவர், கிறிஸ் கெய்ல். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 59 சிக்சர்களை அடித்துள்ளார். இந்த சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஆந்திரே ரசல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 21 சிக்சர்களை அடித்தால் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை படைப்பார், ரசல்.
#2.ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் :
தற்போது நடைபெற்று வரும் 12வது 12வது ஐபிஎல் தொடரில் இதுவரை 5 சதங்கள் அரங்கேறியுள்ளது. ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் சார்பாக இரு சதங்களும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு சதமும் பெங்களூர் அணியில் ஒரு சதமும் பஞ்சாப் அணியில் ஒரு சதமும் அடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 99 ரன்களும் டெல்லி வீரர்களான பிருத்திவி ஷா மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் முறையே 99 மற்றும் 97 ரன்களை குவித்து சதமடிக்க தவறினர். இதற்கு முன்னர், 2016 ஆம் ஆண்டில் அடிக்கப்பட்ட ஏழு சதங்களே ஒரு தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்களாக உள்ளன. இந்த ஏழு சதங்களில் நான்கு பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அளித்துள்ளார். மேலும், இது இந்த ஆண்டில் முறியடிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#3.ஒரே ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர் : பிராவோ (32)
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார், பஞ்சாப் வீரர் ஆன்ட்ரூவ் டை. அந்தத் தொடரில் இவர் கைப்பற்றிய விக்கெட்களின் எண்ணிக்கை 24. இந்த நடப்பு தொடரில் டெல்லி வீரர் ரபாடா 10 போட்டிகளில் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் 4 போட்டிகள் டெல்லி அணிக்கு எஞ்சிய நிலையில் இவரே இந்த தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர் இருமுறை ஒரே போட்டியில் 4 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இன்னும் 11 விக்கெட்களை கைப்பற்றினால், பிராவோவின் சாதனையான ஒரே தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை படைப்பார். ஒருவேளை டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால், இந்த சாதனையை எளிதில் படைப்பார் ரபாடா.