2019 ஐபிஎல் தொடரில் தற்போது வரை 44 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் பதற்றமான 90 ரன்கள், அதிவேக அரைசதங்கள், ஆட்டத்தின் வெற்றியை தீர்மானித்த சூப்பர் ஓவர், எதிர்பாராத அஸ்வினின் ரன் அவுட் என பல அற்புதங்கள் நடைபெற்று உள்ளன. ஒருவழியாக, 2019 ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கின்றன.
இந்த லீக் ஆட்டங்களில் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வகிக்கும் அணிகள் அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் சுற்று வாய்ப்புக்குள் நுழையும் என எதிர்பார்க்கபடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளுக்கு இனிவரும் போட்டிகளில் வாழ்வா - சாவா? என்றதொரு கட்டத்தை நெருங்கியுள்ளது. அவற்றில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ரன் ரேட் அடிப்படையின்றி ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கின்றது.
#1.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
நடப்பு தொடரில் முதல் 8 ஆட்டங்களில் ஏழு தோல்வியைக் கண்டது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. எனவே, பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளானதன் பேரில், பின்னர் வந்த போட்டிகளில் வெற்றிகளைக் கண்டு பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது, பெங்களூரு. நடப்பு தொடரில் 7 வெற்றிகளைப் பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு அணி முன்னேற முடியும் என்ற வாய்ப்பு உள்ளது. எனவே, இனிவரும் அனைத்துபோட்டிகளிலும் பெங்களூர் அணி கட்டாயம் வெற்றி பெற்றிட வேண்டும். ஆகவே, பின்வரும் மூன்று மாற்றங்கள் பெங்களூர் அணியை ரன்ரேட் அடிப்படையின்றி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வைக்கும்.
#2.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
பெங்களூர் அணியை போலவே கொல்கத்தா அணியும் இதுவரை விளையாடியுள்ள லீக் ஆட்டங்களில் மொத்தம் நான்கு வெற்றியை பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடரின் தொடக்கத்தில் தடுமாறியது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடரின் முதல் 5 ஆட்டங்களில் நான்கு வெற்றிகளைக் கண்டது. பின்னர் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. எனவே, வாழ்வா - சாவா? என்று நிலைக்கு கொல்கத்தா அணி தள்ளப்பட்டுள்ளது. இனி வரும் போட்டிகளில் அனைத்திலுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, பின்வரும் மூன்று மாற்றங்கள் கொல்கத்தா அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு ரன் ரேட் அடிப்படையின்றி தகுதி பெற வைக்கும்.