பன்னிரெண்டாவது ஐபிஎல் தொடரின் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில் வென்றது. இந்த தொடரில் பல தரப்பிலான இளம் வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வளர்ந்துவரும் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான செயல்பட்டதை பலமுறை நாம் கண்டுள்ளோம். எனவே, தங்களது திறனை அபாரமாக வெளிப்படுத்திய சர்வதேச போட்டியில் விளையாடாத மூன்று சிறந்த இளம் வீரர்களை பற்றி இந்தத் தொகுப்பில் காண்போம்.
#3.ராகுல் சாகர் - (மும்பை இந்தியன்ஸ்)
நடப்பு சீசனில் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கும் போற்றத்தக்கது. அணியில் இடம்பெற்ற இளம் வீரரான ராகுல் சாகர், தொடரில் 15 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், இவரது பௌலிங் எகானமி 7க்கு மிகாமல் இருந்தது. நெருக்கடி தருணங்களில் தமது பந்துவீச்சால் எதிரணி விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பாடுபட்டார், இந்த இளம் வீரர். அணியில் மற்ற பந்து வீச்சாளர்களான ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பூம்ரா, மலிங்கா போன்று இடம்பெற்றிருந்தாலும் தனக்கென தனி இடத்தை தேடிப் பிடித்தார். விரைவிலேயே இவர் இந்திய சீனியர் அணியில் இடம் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
#2.ரியான் பராக் - (ராஜஸ்தான் ராயல்ஸ்)
17 வயதான ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நெருக்கடி தருணங்களை உணர்ந்து அபாரமாக நடப்பு தொடரில் தமது ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். இவர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் 160 ரன்களைக் குவித்திருந்தார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இவர் அரைசதம் அடித்தார். இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் மிக இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், அந்த போட்டியில் வேறு எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடாவிட்டாலும் அணியில் தமது பொறுப்பை உணர்ந்து அரை சதம் அடித்தார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் வருங்காலம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. அடுத்து வரும் ஐபிஎல் சீசனில் இவர் அணியின் முன்வரிசை பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டு மேலும் அதிக ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கலாம்.
#1.ஸ்ரேயாஸ் கோபால் - (ராஜஸ்தான் ராயல்ஸ்)
அணியில் இடம் பெற்ற மற்றொரு இளம் வீரரான ஸ்ரேயாஸ் கோபால், நடப்பு தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு தனது ஐபிஎல் வாழ்க்கையை மும்பை அணியில் இருந்து தொடங்கி இருந்தாலூம் அந்த தொடரில் பல போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு அளிக்காவிடவில்லை. கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணியில் இடம் பெற்ற பிறகு தமது திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்த வண்ணம் இருந்தார். கடந்த தொடரில் 11 போட்டியில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அணி நிறுவனத்திற்கு நம்பிக்கை அளித்ததன் பேரில், இந்த ஆண்டும் தக்க வைத்து 14 போட்டிகளில் விளையாடினார். அவற்றில் 20 விக்கெட்களை 7.22 என்ற பவுலிங் எகனாமிக் வீழ்த்தியிருந்தார். மேலும், பெங்களூர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் மற்றும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் உட்பட மூன்று வீரர்களை தொடர்ச்சியாக 3 பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பேட்டிங்கில் லோயர் மிடில் ஆர்டரில் களம் இறங்கும் இவர், ஓரளவுக்கு ரன்களை குவிக்கவும் தடுமாறுவது இல்லை.