நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 8 அணிகள் ஒன்றான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நடப்பு தொடரில் முதல் 5 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை சிறப்பாக தொடங்கிய போதிலும் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியைத் தலைவியது. கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆந்திரே ரஸ்ஸல் பல போட்டிகளில் தமது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். இந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு சுற்றுக்கு தகுதி பெறாமல் போகும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அணியின் பேட்டிங் திருப்திகரமாக அமைந்தாலும் பவுலிங் சிறப்பாக அமையவில்லை. மிகப் பெரிய இலக்கை எதிரணியினர் துரத்தும் போது கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். வெகு சில வீரர்கள் மட்டுமே எதிர்பார்ப்புக்கு தக்கபடி விளையாடினர். இதன் காரணமாக, இந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. எனவே, அடுத்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவிக்க போகும் மூன்று வீரர்கள் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.ரிங்கு சிங்:
2017ஆம் ஆண்டு தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார், இந்த இடது கை பேட்ஸ்மேன். பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் இவர், கடந்த ஆண்டு கொல்கத்தா அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. இருப்பினும், எந்த ஒரு போட்டியிலும் இவர் தனது போதிய ஆட்டத்திறனை நிரூபிக்கவில்லை. இவரின் மேல் வைத்த நம்பிக்கை காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் தக்க வைக்கப்பட்டு 5 போட்டிகளில் களமிறக்கப்பட்டார். இவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும் அவற்றை அனைத்தும் வீணாக்கினார். ஐந்து போட்டிகளில் வெறும் 37 ரன்களை மட்டுமே குவித்தார். பெரும்பாலான போட்டிகளில் ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் களம் இறங்கிய இவர், எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொல்கத்தா அணியின் பல இளம் வீரர்கள் இருப்பதனால் அவர்களுக்கு நெருக்கடியை சூழ்நிலைகளை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை. எனவே, அடுத்து வரும் ஐபிஎல் சீசனில் இவரை விடுவிப்பதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன.
#2.லாக்கி பெர்குசன்:
நியூசிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன், கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் முக்கிய பங்களிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சோபிக்க தவறிவிட்டார். இவர் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றம் அளித்தார். மேலும், இவரது பவுலிங் எக்கானமி 10-க்கும் மேல் உள்ளது.அதுவும் ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை வீசும்போது ரன்களை வாரி வழங்கும் வள்ளலாகவே மாறினார். இறுதி லீக் ஆட்டங்களில் இவருக்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கரிணி ஆடும் லெவனில் இணைக்கப்பட்டு சிறப்பாகவும் செயல்பட்டார். எனவே, இவரும் அடுத்த சீசனில் விடுவிக்கப்படலாம்.
#1.ராபின் உத்தப்பா:
கர்நாடகாவை சேர்ந்த பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா, நடப்பு தொடரில் அணி நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் நெருக்கடியை சமாளித்து 40 பந்துகளில் 47 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்திருந்தார். இவரது பொறுமையான பேட்டிங்கால் சமூக வலைத்தளங்களில் பேசும்பொருள் ஆனார். கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. அந்த இரு சீசனிலும் தலா 400 ரன்களுக்கு மேல் குவித்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டார். இதனால், கொல்கத்தா அணியில் 6.4 கோடி ரூபாய்க்கு நடப்பு சீசனில் தக்கவைக்கப் பட்டிருந்தாலும் இவரின் ஆட்டம் திருப்தியளிக்கவில்லை. இவர் விளையாடியுள்ள நடப்பு சீசனில் 12 போட்டிகளில் 282 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார். எனவே, இவரையும் அடுத்த சீசனில் அணி நிர்வாகம் விடுவிக்கப்பதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன.