ஐபிஎல் 2019: நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட 3 இந்திய வீரர்கள் 

KL Rahul
KL Rahul

நடப்பு ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பலரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சீராக செயல்பட்டு தங்களது அணியின் வெற்றிக்கு உதவிய வந்துள்ளனர். டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, ரபாடா, இம்ரான் தாகிர் போன்றோர் தொடரின் அதிக ரன்களையும் அதிக விக்கெட்களையும் எடுத்த வீரர்கள் ஆவர். தற்போது அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அதேபோல், பந்துவீச்சாளர்களில் ரபாடா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இது போன்ற வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு இருந்தாலும் இந்திய வீரர்களின் பங்களிப்பும் சிறப்பாகவே நடப்பு தொடரில் அமைந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, தீபக் சகார், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, மணிஷ் பாண்டே போன்ற வீரர்களின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது. அவ்வாறு, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 3 இந்திய வீரர்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.

#3.ஷிகர் தவன் - 470 ரன்கள்:

Shikhar Dhawan
Shikhar Dhawan

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷிகர் தவான், நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்த தொடரை சிறப்பாக தொடங்கா போதிலும் தொடரின் பிற்பாதியில் அமர்க்களப்படுத்தி வருகிறார். மேலும், இவரின் பங்களிப்பு டெல்லி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாக்கியாக்கியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நுழைந்திருக்கின்றன. இவர் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 5 அரைசதங்கள் உட்பட 470 ரன்களை குவித்துள்ளார். மேலும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 97 ரன்களை குவித்ததே இந்த தொடரில் இவரின் அதிகபட்ச ஸ்கோர்ஆகும்.

#2.ஸ்ரேயாஸ் கோபால் - 18 விக்கெட்டுகள்:

Shreyas Gopal
Shreyas Gopal

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள கர்நாடகா வீரரான ஷ்ரேயாஸ் கோபால், நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். மேலும், இந்த அணிக்கு இவரே துருப்புச்சீட்டாக விளங்கி வருகிறார். ஆட்டத்தின் நெருக்கடி தருணங்களில் பந்து வீசி எதிரணி வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றி வருகிறா.ர் இதுவரை இவர் விளையாடியுள்ள 13 போட்டிகளில் 18 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் "ஹாட்ரிக் விக்கெட்" வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும், நடப்பு தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

#1.கே.எல்.ராகுல் - 520 ரன்கள்:

KL Rahul
KL Rahul

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், கடந்த தொடரை போலவே நடப்பு தொடரிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி தொடர்ச்சியான ரன்களை குவித்து வருகிறார். மேலும், இவரே நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார். இது மட்டுமல்லாமல், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 சதங்கள் ஒரு சதம் உட்பட மொத்தம் 520 ரன்களை குவித்துள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil