முன்னணி அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இருப்பினும், டாஸ் இழந்த சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கையே முதலில் தேர்ந்தெடுக்கலாம் என்று விரும்பினார். எனவே, முதலாவது பேட்டிங் செய்தது இவ்விரு கேப்டன்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக அமைந்தது. இதன்படி, சென்னை அணி தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கியது. 4 ஓவர்களில் 4 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது, சென்னை சூப்பர் கிங்ஸ். இதன் பின்னர், பாப் டு பிளிசிஸ் உடன் சுரேஷ் ரெய்னா இணைந்து அணிக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தனர். ஆட்டத்தின் இறுதியில் களம் புகுந்த மகேந்திர சிங் டோனி, தனது அபாரமான பேட்டிங்கால் சென்னை அணி 179 ரன்களை எட்ட உதவினார். 22 பந்துகளில் 3 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் உட்பட 44 ரன்களை குவித்து இருந்தார், தோனி. பின்னர், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி, 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒருவர் மட்டுமே தனியாக போராடி 44 ரன்களை குவித்தார். வேறு எந்த பேட்ஸ்மேனும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதன்பின்பு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல் வருமாறு,
புள்ளி பட்டியல்:
இந்த வெற்றியின் மூலம் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 9 வெற்றிகளோடு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. மேலும், அணியின் நிகர ரன் ரேட் +0.209 என்ற அளவில் ஆரோக்கியமானதாக முன்னேற்றம் கண்டது. இந்த தோல்வியினால் டெல்லி அணி, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த அணி இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 8 வெற்றிகளோடு நிகர ரன் ரேட் -0.096 என்ற அளவில் பின்னோக்கிச் சென்றுள்ளது.
ஆரஞ்சு நிற தொப்பி:
நேற்றைய போட்டியில் 44 ரன்களை குவித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், அதிக ரன்களை குவித்த பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்தார். இவர் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 427 ரன்களை குவித்துள்ளார். மேலும், சென்னை கேப்டன் தோனி 8 போட்டிகளில் விளையாடி 358 ரன்களை குவித்து இந்த பட்டியலில் 13 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.தொடர்ந்து டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.
ஊதா நிற தொப்பி:
நேற்றைய போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் சென்னை சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். மற்றொரு சுழல் பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை நேற்று கைப்பற்றியதன் மூலம் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பட்டியலில் பதினோராம் இடத்திற்கு முன்னேறினார். இவர் விளையாடியுள்ள 12 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 12 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றிய டெல்லி பந்துவீச்சாளர் ரபாடா, தொடர்ந்து முன்னிலை வகித்து ஊதா நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.