2019 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்ட அணியாக உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆகிய இரு அணிகள் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க முடியும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நெருங்கி வருகின்றன. எனவே, தற்போது பிளே-ஆப் சுற்றுக்கு காண வாய்ப்பு போட்டியிடும் 6 அணிகளின் நிலைகளைப்பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#6.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
தொடர்ந்து பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள இரு போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இதன்படி, நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி முடிவு இல்லாமல் போனது. இதோடு இந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பும் மங்கிப் போய்விட்டது. இனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டம் தான் நடப்பு தொடரில் இந்த அணிக்கு எஞ்சியுள்ளது. தொடர்ச்சியாக ஆறு தோல்விகளை சந்தித்த விராட் கோலி தலைமையில் பெங்களூரு அணி மீதமுள்ள 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று சற்று ஆறுதல் அளித்தது. ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கான ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தால், மும்பை அணி ஹைதராபாத் அணியை தோற்றிருந்தால் மற்றும் கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரு அணிகள் ஒரு போட்டிக்கு மேல் வெற்றி பெறாவிட்டால் பெங்களூர் அணி தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.
#5.ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நடப்பு தொடரில் ஓரளவுக்கு தான் வெற்றிகளைக் குவித்தது. இதன் பின்னர், அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் தொடரின் பிற்பாதியில் அறிவிக்கப்பட்டார். இதுமட்டுமல்லாது, உலகக் கோப்பை தொடரின் முன்னேற்பாடுகளால் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இது இந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் பத்து வெற்றி புள்ளிகளோடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தால், இந்த அணியின் பிளே ஆப் சுற்று நீடித்திருக்கும். ஆனால், நேற்றைய போட்டியில் முடிவு இல்லாமல் போனதால், இந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.
#4.கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் ஐந்தில் வெற்றிபெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலையே தொடர்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததன் காரணமாக இந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிப்பதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா - சாவா ஆட்டம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி நிச்சயம் இரு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒருவேளை இந்த இரு வெற்றிகளும் பஞ்சாப் அணிக்கு சாதகமாக முடிந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இந்த அணிக்கு கிடைக்கும்.
#3.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இந்த அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளோடு இந்த அணியும் ஒரே புள்ளியில் இருப்பதால் அந்த இரு அணிகளை விட கூடுதல் ரன் ரேட்டை கொண்டுள்ளது. மும்பை மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் ஒரு தோல்வி அடைந்தால் கூட இந்த அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும். மேலும், மும்பை அணிக்கு மீதமுள்ள இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவினால் இந்த கொல்கத்தா அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு தொடராது.
#2.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
புள்ளி பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி, ஆறு வெற்றிகளைக் குவித்திருக்கிறது. எனவே, மற்ற அணிகளை போல இல்லாமல் சற்று முன் நோக்கியுள்ளது, ஹைதராபாத் அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றில் இந்த அணி அடி எடுத்து வைக்கும். அதன் பின், நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல் இரு இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு இந்த அணிக்கு உள்ளது.
#1.மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு அடுத்தபடியாக உள்ள பலமான அணி என்ற பெருமையை கொண்டது. இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது, இந்த அணி. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிரான இரு ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்த அணி ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்து விட முடியும்.