#3.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இந்த அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளோடு இந்த அணியும் ஒரே புள்ளியில் இருப்பதால் அந்த இரு அணிகளை விட கூடுதல் ரன் ரேட்டை கொண்டுள்ளது. மும்பை மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் ஒரு தோல்வி அடைந்தால் கூட இந்த அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும். மேலும், மும்பை அணிக்கு மீதமுள்ள இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவினால் இந்த கொல்கத்தா அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு தொடராது.
#2.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
புள்ளி பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி, ஆறு வெற்றிகளைக் குவித்திருக்கிறது. எனவே, மற்ற அணிகளை போல இல்லாமல் சற்று முன் நோக்கியுள்ளது, ஹைதராபாத் அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றில் இந்த அணி அடி எடுத்து வைக்கும். அதன் பின், நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல் இரு இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு இந்த அணிக்கு உள்ளது.
#1.மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு அடுத்தபடியாக உள்ள பலமான அணி என்ற பெருமையை கொண்டது. இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது, இந்த அணி. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிரான இரு ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்த அணி ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்து விட முடியும்.