2019 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் முன்னேறுவது எட்டாவது முறையாகும். ஏற்கனவே, முறையே 2008, 2010, 2011,2012, 2013, 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு இந்த அணி முன்னேறியுள்ளது. மேலும், அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள ஒரே அணி என்ற சாதனையும் சென்னை அணி கொண்டுள்ளது. இன்று வரை சென்னை அணி மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் 2010 மற்றும் 2011 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள ஒரே அணியாகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக மூன்று முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் 2011 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராகவும் தொடர்ந்து இரு ஆண்டுகள் ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்து உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். எனவே, ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் சென்னை அணியின் சில புள்ளி விவரங்களை இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
205 / 5 - 2011இல் பெங்களூர் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்ததே இறுதிப் போட்டிகளில் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
125 / 9 - 2013இல் மும்பை அணிக்கு எதிராக 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆக பதிவாகியுள்ளது.
241 - சென்னை அணியின் சின்னத் தல "சுரேஷ் ரெய்னா" சென்னை வீரர்களிலேயே அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
117* - கடந்த ஆண்டு நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 117 ரன்கள் ஆட்டமிழக்காமல் ஷேன் வாட்சன் குவித்தார். இது தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
7 - இதுவரை இறுதி ஆட்டங்களில் சென்னை அணியின் வீரர்கள் ஏழு அரைச்சதங்களை கடந்துள்ளனர்.
2 - சுரேஷ் ரெய்னா மற்றும் மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் இரு அரைச்சதங்களை கடந்துள்ளனர். இது அதிகபட்ச அரைசதங்கள் ஆகும்.
58 - இதுவரை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் 58 சிக்சர்களை சென்னை அணியின் வீரர்கள் அடித்துள்ளனர்.
13 - சுரேஷ் ரெய்னா 13 சிக்சர்களை அடித்து அதிகபட்ச சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றார்.
13 - மீண்டும் ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
பவுலிங் சாதனைகள்:
9 - ஆல்ரவுண்டர் வெய்ன் பிராவோ 9 விக்கெட்களை கைப்பற்றி உள்ளதே இறுதி போட்டிகளில் கைபற்றப்பட்ட அதிகபட்ச விக்கெட்கள் ஆகும்.
4 / 42 - 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை பிராவோ கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
5 - கேப்டன் தோனி இதுவரை ஐந்து வீரர்களை தமது விக்கெட் கீப்பிங் பணியால் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
பீல்டிங் சாதனைகள்:
5 - சுரேஷ் ரெய்னா ஐந்து கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.