2019 ஐபிஎல் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டம் சென்னையின் சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. ஏற்கனவே, சென்னை மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் சென்னை அணி 5 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. நடப்பு தொடரிலும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தது, சென்னை அணி. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் இரண்டு முறை சென்னை கேப்டன் தோனி ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். எனவே, இந்த மைதானத்தில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டிகளில் படைக்கப்பட்ட சாதனைகள் வருமாறு,
பேட்டிங் சாதனை:
222 / 5 - சென்னை அணி இம்மைதானத்தில் குவித்த 222 / 5 என்பதே அதிகபட்ச ஸ்கோராகும்.
112 / 9 - 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 112 ரன்களை குவித்து இருந்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
224 - சென்னை அணியின் வீரர் முரளி விஜய் 244 ரன்கள் குவித்ததே தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
113 - 2012ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முரளி விஜய் 113 ரன்கள் குவித்து உள்ளார். இதுவே, இரு அணிகளும் மோதிய போட்டிகளில் ஒரு வீரர் முதல் மற்றும் ஒரே சதமாகும்.
9 - இவ்விரு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் இதுவரை 9 அரைச்சதங்களை கடந்துள்ளனர்.
2 - தோனி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் தலா இரு அரைச்சதங்களை அடித்துள்ளனர். வேறு எந்த நபர்களும் இதுவரை ஒரு அரை சதத்தை தாண்டவில்லை.
62 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் 62 சிக்ஸர்கள் இதுவரை அடிக்கப்பட்டுள்ளன.
13 - சென்னை கேப்டன் தோனி 13 சிக்சர்களை அடித்ததே தனிநபர் அதிகபட்ச சிக்சர்களாகும்.
28 - முரளி விஜய் இதுவரை, 28 பவுண்டரிகளை விளாசினார். இதுவே, இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒரு வீரர் விளாசிய அதிகபட்ச பவுண்டரிகள் ஆகும்.
பௌலிங் சாதனைகள்:
10 - சென்னை அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் இதுவரை 10 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.
3 / 23 - 2012ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், இதுவே சிறந்த பந்துவீச்சாக இன்று வரை உள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
6 - மகேந்திரசிங் தோனி இதுவரை விக்கெட் கீப்பிங்கால் ஆறு வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
ஃபீல்டிங் சாதனைகள்:
5 - முரளி விஜய் 5 கேட்ச்களை பிடித்து இவ்விரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.