2019 ஐபிஎல் தொடரின் 45 ஆவது லீக் ஆட்டம் இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களத்தில் சந்திக்க உள்ளன. இதற்கு முன்னர், இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிய உள்ளன. அவற்றில், ஒரு போட்டி கைவிடப்பட்டது. மற்றொரு போட்டி முடிவு இல்லாமல் போனது. இதுபோக நடைபெற்ற 6 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இவ்விரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதிய போட்டிகளில் படைத்த சாதனைகள் வருமாறு,
பேட்டிங் சாதனைகள்:
217 / 4 - 2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 / 4 என்ற அதிகபட்ச ஸ்கோரை இம்மைதானத்தில் பதிவு செய்திருந்தது.
92 / 10 - 2010 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோராக இம்மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
177 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரஹானே இதுவரை 177 ரன்களை குவித்தது, தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
103* - 2012 ஐபிஎல்லில் ரஹானே 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இது ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட தனி நபர் அதிகபட்ச ரன்களாகும்.
2 - பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் இருமுறை அரை சதங்களை அடித்துள்ளார். இது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிக அரை சதங்களை அடித்த வீரர் என்ற சாதனை ஆகும்.
77 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 77 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
11 - ராஜஸ்தான் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் 11 சிக்சர்களை அடித்துள்ளார். இது தனிநபர் அதிகபட்ச சிக்சர்களாகும்.
23 - அஜிங்கியா ரஹானே 23 பவுண்டரிகளை அடித்து அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பவுலிங் சாதனைகள்:
5- ராஜஸ்தான் வீரர் சித்தார்த் இம்மைதானத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
4 / 25 - 2012 ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சித்தார்த் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே, சிறந்த பந்துவீச்சாக இதுவரை உள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் 4 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது அதிகபட்ச விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
பீல்டிங் சாதனைகள்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான ரஹானே மற்றும் பெங்களூர் அணியின் வீரரான ரவி ராம்பால் ஆகியோர் தலா 3 கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச்கள் பிடித்து வீரர்கள் என சாதனை படைத்துள்ளனர்.