நடப்பு ஐபிஎல் தொடரில் 54 வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளனர். இதுவரை இம்மைதானத்தில் நடைபெற்றுள்ள ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை குவித்து பெங்களூர் அணி முன்னிலை வகிக்கிறது. 2016 ஆம் ஆண்டு இம்மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்தது, ஹைதராபாத் அணி. இதனால், தனது முதலாவது சாம்பியன் பட்டத்தை வென்றது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் கூடுதல் உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. எனவே, மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் படைக்கப்பட்ட சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள் :
227 / 4 - 2016 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. மேலும், இதுவே அந்த தொடரில் குவித்த அதிகபட்ச ஸ்கோராகும்.
155 / 6 - 2014 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி குவித்த 155 ரன்களே இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் குவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகும்.
306 - பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் 306 ரன்கள் குவித்து உள்ளார்.
93* - 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்ததே தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
16 - இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் மொத்தம் 16 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
4 - ஐதராபாத் அணியின் வீரர் டேவிட் வார்னர் நான்கு அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும், இதுவே ஒரு வீரரின் அதிக அரைசதங்கள் ஆகும்.
115 - இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் 115 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
18 - பெங்களூரு அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் 18 சிக்சர்களை அடித்து அதிகபட்ச சிக்சர்களை அடித்து வீரர்களில் முன்னிலை வகிக்கிறார்.
30 - டிவில்லியர்ஸ் 30 பவுண்டரிகளை அடித்து அதிக பவுண்டரிகளை அடித்து வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
பௌலிங் சாதனைகள்:
6 - இம்மைதானத்தில் இரு அணிகளுக்கும் நடைபெற்றுள்ள போட்டிகளில் சாஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 6 விக்கெட்களை கைப்பற்றி உள்ளனர். மேலும், இதுவே அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் முதன்மையான சாதனையாகும்.
3 / 17 - 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத் அணியின் வீரர் கரண் சர்மா 17 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது தனி நபர் அதிகபட்ச பந்துவீச்சை சாதனையாகும்.
ஃபீல்டிங் சாதனைகள்:
5 - பெங்களூர் அணியின் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் 5 கேட்ச்களை பிடித்துள்ளார். இதுவே, இம்மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் பிடித்த அதிகபட்ச கேட்ச்களாகும்.