சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலான தோனியை பற்றிய ஹர்திக் பாண்டியாவின் டிவிட்

MSD & HK
MSD & HK

நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் கை கோர்த்து இருப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு தலைப்பாக முன்னாள் இந்திய கேப்டன் என்னுடைய உத்வேக வீரர் என்று குறிப்பிட்டிருந்தார்.

உங்களுக்கு தெரியுமா...

நேற்று(ஏப்ரல் 7) நடந்த 2019 ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சிதம்பரம் மைதானத்தில் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இவ்வருட ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டிகளில் மூன்று முறையும் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கதைக்கரு

ஓடிஐ மற்றும் டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்கிறார். இவருக்கு 2019 ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டும் சிறப்பாக அமைந்துள்ளது. உலகக் கோப்பைக்கு முன் ஹர்திக் பாண்டியாவின் இந்த அதிரடி ஆட்டத்திறன் இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ஹர்திக் பாண்டியா தற்போது ஐபிஎல் தொடரில் பெரும் நட்சத்திர வீரராக உள்ளார். இருப்பினும் தற்போது வரை தனது முன்னாள் இந்திய கேப்டன் மீதுள்ள மரியாதை சிறிதளவும் குறையவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "தோனி என்னுடைய உத்வேகம், என்னுடைய சகோதரர், என்னுடைய நண்பர், என்னுடைய லெஜன்ட்".

மகேந்திர சிங் தோனி தற்போதைய தலைமுறையினரின் மிகப்பெரிய உத்வேகமாக உள்ளார். எனவே பாண்டியா புதிதாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

ஹர்திக் பாண்டியாவின் டிவிட்:

இரு இந்திய நட்சத்திர வீரர்களும் ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். இவர்களின் தற்போதைய ஆட்டத்திறனை பார்க்கும் போது உலகக் கோப்பையில் இந்திய அணி மற்ற அணிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இருவரின் ஆட்டத்திறனை கண்டு இந்திய ரசிகர்கள் பெரும் உற்சாகத்தை அடைந்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா இவ்வருட ஐபிஎல் தொடரில் 194 என்ற பிரம்மிக்க வைக்கும் ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 393 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் பௌலிங்கில் 14 விக்கெட்டுகளை இத்தொடரில் வீழ்த்தியுள்ளார்.

தோனியும் இவ்வருட ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். 2019 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முழு காரணமாக இருந்துள்ளார்.

அடுத்தது என்ன?

வரும் ஞாயிறன்று நடைபெறவிருக்கும் 2019 ஐபிஎல் சீசனின் இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2ல் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் மீண்டுமொருமுறை சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும். கிரிக்கெட் வீரர்கள் தங்களது சக வீரர்களின் அளவு கடந்த அன்பை வைத்திருப்பதை பார்க்கும் போது மிகவும் சிறப்பாக உள்ளது.

Quick Links

App download animated image Get the free App now