2019 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று இன்று நடைபெற உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கு முன்னர், மூன்று முறை இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியுள்ளது. இம்முறை விளையாடுவது இந்த அணிக்கு நான்காவது முறையாகும். வேறு எந்த அணிகளும் இதுவரை 4 முறை இரண்டாவது தகுதி சுற்றில் விளையாடியதில்லை. டெல்லி அணி இரண்டாவது தகுதி சுற்றில் விளையாடுவது, இது இரண்டாவது முறையாகும். எனவே, இரண்டாவது தகுதிச்சுற்றில் படைக்கப்பட்ட பல சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
226 / 6 - 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்ததே இதுவரை அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
110 / 10 - 2017இல் கொல்கத்தா அணி 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோராகும்.
130 - பெங்களூர் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் இரண்டாவது சுற்றில் 130 ரன்களை குவித்தது தனிநபர் குவித்த அதிக ரன்கள் ஆகும்.
122 - 2014இல் பஞ்சாப் அணியின் சேவாக் 122 ரன்களை குவித்தது ஒரு போட்டியின் தனிநபர் அதிகபட்ச ரன்கள் ஆகும்.
7 - இரண்டாவது தகுதி சுற்றில் இதுவரை 7 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
2 - இரண்டாவது தகுதிச்சுற்றில் இதுவரை இரண்டு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
94 - இரண்டாவது தகுதி சுற்றில் இதுவரை 94 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
8 - கிறிஸ் கெய்ல் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் தலா எட்டு சிக்சர்களை அடித்து, அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்.
15 - சென்னை அணியின் முரளி விஜய் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 15 பவுண்டரிகள் அடித்து, அதிக பவுண்டரிகளை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர்.
பௌலிங் சாதனைகள்:
5 - சென்னை அணியின் ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இது இரண்டாவது சுற்றில் கைப்பற்றப்பட்ட அதிகபட்ச விக்கெட்கள் ஆகும்.
4 / 16 - 2017இல் மும்பை அணியின் வீரர் கரண் சர்மா 16 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இது சிறந்த பந்துவீச்சு சாதனையாகும்.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
4 - தினேஷ் கார்த்திக் நான்கு முறை தமது விக்கெட் கீப்பிங்கால் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
ஃபீல்டிங் சாதனைகள்
4 - சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா நான்கு கேட்சுகளை பிடித்து வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த ஃபீல்டிங் சாதனையாகும்.