இந்த ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் மும்பை அணி வரலாற்றில் ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் முதன் முறையாக 2010-ஆம் ஆண்டு சச்சின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர். பின்னர் இரண்டு ஆண்டுகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாத நிலையில் 2013-ஆம் ஆண்டு முதல் முறை கோப்பையை வென்றது. இதுவரை 3 முறை கோப்பையை வென்று கலக்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 2013 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் சென்னை அணியை வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது.
2017-ஆம் ஆண்டு புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி மூன்று முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் படைத்தது.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெறும் முக்கிய விவரங்களை காணலாம்.
பேட்டிங்:
2015-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி 202 ரன்கள் எடுத்தது இதுவரை நடந்த இறுதிப் போட்டியில் எடுத்த அதிகபட்சமாக ரன்கள்.
2017-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக மும்பை அணி 129 ரன்கள் எடுத்தது இறுதிப்போட்டியில் எடுத்த குறைந்தபட்ச ரன்கள்.
இதுவரை மும்பை அணி விளையாடிய ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பொல்லார்ட் ஒட்டுமொத்தமாக 130 ரன்கள் எடுத்தது தான் மும்பை வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள்.
2015-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதியாட்டத்தில் மும்பை அணி வீரர் சிம்மன்ஸ் 68 ரன்கள் எடுத்தது இறுதிப்போட்டியில் மும்பை வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி வீரர்கள் 3 அரை சதங்கள் அடித்துள்ளனர். பொல்லார்ட் (2013-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 60 ரன்கள்), சிம்மன்ஸ் (2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 68 ரன்கள்), ரோஹித் சர்மா (2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 50 ரன்கள்) ஆகியோர் அடித்துள்ளனர்.
நான்கு முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள மும்பை அணி ஒட்டுமொத்தமாக 25 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை வீரர் பொல்லார்ட் அதிகபட்சமாக 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
ஐபிஎல் இறுதியாட்டத்தில் இதுவரை மும்பை வீரர் பொல்லார்ட் அதிகபட்சமாக 12 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
பவுலிங்:
மிட்செல் ஜான்சன் 2017 மற்றும் 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் இதுவரை 5 விக்கெட்டுகள் எடுத்தது தான் மும்பை அணி வீரர் வீழ்த்திய அதிக விக்கெட்கள்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் மிட்செல் மெக்லீகாங்கன் சென்னை அணிக்கு எதிராக 2015-ஆம் ஆண்டு 3 விக்கெட்கள் வீழ்த்தி 25 ரன்கள் கொடுத்தது தான் சிறந்த பவுலிங்காக உள்ளது.
விக்கெட் கீப்பிங்:
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும் பார்த்தீவ் படேல் ஆகிய இருவரும் இரண்டு டிஸ்மிஸ்ஸல் செய்தது தான் அதிகம்.
பில்டிங்:
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பொல்லார்ட் இதுவரை 3 கேட்சுகள் பிடித்துள்ளார். இதுவரை மும்பை வீரர் இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச கேட்சுகள் ஆகும்.
எழுத்து- நீலஞ்சன் சென்
மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்.