ஐபிஎல் 2019: மேட்ச் 15, MI vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Rohit Sharma vs MS Dhoni
Rohit Sharma vs MS Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது ஏப்ரல் 3 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 26 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 14 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர்: மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான வான்கடே மைதானத்தில் சென்னைக்கு எதிராக 8 போட்டிகளில் பங்கேற்று 5ல் மும்பை வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே மைதானம் ஒரு அதிக ரன்கள் குவிக்க கூடியதாக இருக்கும். பவர்பிளேவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும்.

மும்பை இந்தியன்ஸ்

Mumbai Indians
Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் 2019 ஐபிஎல் தொடரில் 1 வெற்றி மற்றும் 2 தோல்விகளை அடைந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது மும்பை. இரு அணிகளுக்கு எதிரான கடந்த கால நேருக்கு நேரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே அதிகம் சாதகமாக இருந்துள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முற்றுப்புள்ளி வைக்கும் என தெரிகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ரோகித் சர்மா, டிகாக், யுவராஜ் சிங்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் டிகாக் இந்த ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் பங்கேற்று 110 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். சென்னை அணிக்கு எதிராக இவரது அதிரடி ஆட்டம் மும்பை அணிக்கு தேவைப்படுகிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அதிவேக 32 ரன்களை எடுத்தார். இதை விட சிறப்பான ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெளிபடுத்துவார். கடந்த 3 போட்டிகளில் மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பான அதிரடியை வெளிபடுத்தி வருகின்றனர். கேப்டன் ரோகித் சர்மா சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சிறப்பான XIஐ தேர்ந்தேடுத்து அணியை வழிநடத்த வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாகும்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: க்ருநால் பாண்டியா, ஜாஸ்பிரிட் பூம்ரா

பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் க்ருநால் பாண்டியா மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பேட்டிங்கையும் வெளிபடுத்தினார். எனவே அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளிலும் இவரது ஆட்டத்திறன் தொடரும் என நம்பப்படுகிறது. ஜாஸ்பிரிட் பூம்ரா இவ்வருட ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆனால் அருமையான எகானமி ரேட்டுடன் பந்துவீச்சை மேற்கொண்டார். இப்போட்டியில் 3.4 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்திருந்தார். ஜெஸன் பெஹாரன்ஆஃப் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஐபிஎல் தொடருக்கு திரும்பியுள்ளார். எனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் போட்டியில் இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் துருப்புச் சீட்டாக பூம்ரா மற்றும் ஜேஸன் பெஹாரன்ஆஃப் திகழ்கின்றனர்.

உத்தேச XI: ரோகித் சர்மா (கேப்டன்), டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங்/இஷான் கிசான், கீரன் பொல்லார்ட்/பென் கட்டிங், ஹார்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, மிட்செல் மெக்லகன்/ஜேஸன் பெஹாரன்ஆஃப், ஜாஸ்பிரிட் பூம்ரா, லாசித் மலிங்கா, மயான்க் மார்கண்டே.

சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai super kings
Chennai super kings

இவ்வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி அட்டவனையில் முதலிடத்தை வகிக்கிறது. சென்னை அணி கடைசியாக வான்கடே மைதானத்தில் விளையாடிய போட்டியில் மோசமாக தோல்வியை தழுவியது. எனவே மும்பை அணிக்கு எதிரான இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நம்பிக்கையில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிம ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பினாலும், தோனியின்( 46 பந்துகளில் 75 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் மீண்டது. சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் தோனி, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் அதிரடி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் தொடரும்.

அம்பாத்தி ராயுடுவின்( 3 போட்டிகளில் 38 ரன்கள்) ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இவ்வருட ஐபிஎல் தொடரில் இல்லை. மீண்டும் மீண்டும் சொதப்பினால் கண்டிப்பாக ஆடும் XI-லிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: இம்ரான் தாஹீர், தீபக் சகார், டுயன் பிரவோ

இம்ரான் தாஹீர் மற்றும் டுவைன் பிரவோ ஆகியோர் இந்த ஐபிஎல் சீசனில் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதே ஆட்டத்திறனை மும்பை அணிக்கு எதிராகவும் வெளிபடும் என நம்பப்படுகிறது. தீபக் சகார் கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர்பிளே ஓவரில் இவரை பந்து வீச செய்து மும்பை அணியின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்த திட்டம் வகுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

உத்தேச XI: அம்பாத்தி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், டுயன் பிரவோ, மிட்செல் சான்ட்னர்/மோகித் சர்மா, தீபக் சகார், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹீர்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now