2019 ஐபிஎல் தொடரின் 6வது ஆட்டத்தில் இன்று(மார்ச் 27) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தகது.
ஒட்டுமொத்த: ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர்: கொல்கத்தா அணி பஞ்சாப் அணியுடன் ஈடன் கார்டன் மைதானத்தில் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 போட்டிகளில் கொல்கத்தா அணியும் 3 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வென்றுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ர்டர்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான 2வது போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் கொல்கத்தா அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: கிறிஸ் லின், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா
நிதிஷ் ராணா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான முதல் போட்டியில் 47 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்களை எடுத்தார். அவருடன் 80 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடிய ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதே சிறப்பான ஆட்டத்தை கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்தி கொல்கத்தா ரசிகர்களுக்கு தனது சொந்த மண்ணில் விருந்தளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ் லின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. எனவே அணியின் நிர்வாகம் அவர்களது சிறப்பான ஆட்டத்தை கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக எதிர்பார்க்கிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: சுனில் நரைன், ஆன்ரிவ் ரஸல், குல்தீப் யாதவ்
ஆன்ரிவ் ரஸல் கடந்த ஐபிஎல் போட்டியில் 32 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் பேட்டிங்கில் 19 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக கொல்கத்தா அணிக்கு சாதகமாக மாற்றினார். இதே அதிரடி ஆல்-ரவுண்டர் திறன் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் அவர் நிச்சியம் வெளிபடுத்துவார். ப்யுஷ் சாவ்லா தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவராக திகழ்கிறார். கடந்த காலத்தில் இவரது சுழற்பந்து வீச்சு கொல்கத்தா அணிக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பலமாம்.
குல்தீப் யாதவ், சுனில் நரைன், லாக்கி பெர்குசன் ஆகியோரது பௌலிங் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் சுமாராக இருந்தது. எனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குறைகளை களைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என பார்க்கப்படுகிறது.
உத்தேச XI: சுனில் நரைன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, சுப்மன் கில், ஆன்ரிவ் ரஸல், குல்தீப் யாதவ், ப்யுஷ் சாவ்லா, லாக்கி பெர்குசன், பிரஸித் கிருஷ்ணா.
கிங்ஸ் XI பஞ்சாப்
பஞ்சாப் அணி 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான முதல் போட்டியில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் , ஜாஸ் பட்லரை 'மேன்கட்' முறையில் ரன் அவுட் செய்தது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. கடைசியில் இந்த விக்கெட் மூலம் ஆட்டத்தின் போக்கு பஞ்சாப் அணிக்கு சாதகமாக மாறியது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், சஃப்ரஸ் கான்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய கிறிஸ் கெய்ல் அதே ஆட்டத்திறனை 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெளிபடுத்தினார். "யுனிவர்சல் பாஸ்" என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் 79 ரன்களை அந்த போட்டியில் குவித்தார். ஈடன் கார்டன் மைதானத்திலும் இந்த அதிரடியை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சஃப்ரஸ் கான் மிடில் ஓவரில் களமிறங்கி 29 பந்துகளில் 46 ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்தினார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு முக்கிய வீரராக செயல்படுவார் சஃப்ரஸ் கான்.
மயன்க் அகர்வால் முதல் போட்டியில் 22 ரன்களை எடுத்தார், கடந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் முதல் போட்டியில் மோசமாக தனது விக்கெட்டை இழந்தார். எனவே அணியின் கேப்டன் இவர்கள் இருவரிடமிருந்து கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: முஜிப் யுர் ரகுமான், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின்
சாம் குரான், முஜிப் யுர் ரகுமான், அன்கிட் ராஜ்பூட் ஆகியோர் கடந்த போட்டியில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால் சாம் குரான் அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளித்திருந்தார். 4 ஓவர்களை வீசி 52 ரன்களை தனது பௌலிங்கில் வழங்கியிருந்தார். எனவே கொல்கத்தா அணியுடனான போட்டியில் இவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த போட்டியில் முகமது ஷமி-க்கு விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் டெத் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு எதிரணியை கலங்கடித்தார்.
உத்தேச XI:
கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங்/கரூன் நாயர், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), ஆன்ரிவ் டை, முகமது ஷமி, அன்கிட் ராஜ்பூட், முஜிப் யுர் ரகுமான்.