ஐபிஎல் 2019: மேட்ச் 9, கிங்ஸ் XI பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ்-முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Rohit Sharma vs Ravichandran Ashwin
Rohit Sharma vs Ravichandran Ashwin

2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தனது சொந்த மண்ணில் முதல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 30 அன்று விளையாட உள்ளது. கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கும். பெங்களூரு அணியுடனான வெற்றியின் உத்வேகத்துடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கவுள்ளது.

பஞ்சாப் அணி இந்த வருட ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெளிப்படுத்திய அதே ஆட்டத்திறனை வெளிபடுத்தும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியின் தொடக்க அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ராஜஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி தன்னை அறிவித்துக் கொண்டார். ஆனால் கொல்கத்தா அணியுடனான இரண்டாவது போட்டியில் குறைந்த ரன்னில் நடையை கட்டினார். பஞ்சாப் அணி பௌலர்களுக்கு கொல்கத்தா அணியுடனான ஆட்டம் ஒரு பாடத்தை புகட்டிருக்கும். அந்த போட்டியில் மொத்தமாக 218 ரன்கள் பஞ்சாப் பந்துவீச்சில் கொல்கத்தா அணியால் விளாசப்பட்டது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 28 அன்று நடந்த பெங்களூரு அணியுடனான போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் வெற்றி பெற்றது. சிறந்த டெத் ஓவர் பௌலர்களான பூம்ரா மற்றும் லாசித் மலிங்காவால் மும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த இரு பந்துவீச்சாளர்களும் கடைசி இரண்டு ஓவர்கள் வீசி 15 ரன்களை மட்டுமே பௌலிங்கில் அளித்து மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா (33 பந்துகளில் 48) மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா(14 பந்துகளில் 32 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை பெங்களூரு அணிக்கு எதிராக வெளிபடுத்தி அணியின் ரன்களை உயர்தினர்.

ஆட்டத்தின் தகவல்கள்

நாள்: சனி, மார்ச் 30,2019

நேரம்: மாலை 4:00 (இந்திய நேரப்படி)

மைதானம்: பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஆடுகளம், மொகாலி

நேரலை: ஸ்டார் நெட்வொர்க்

இனையதளம்: ஹாட்ஸ்டார்

அணியின் செய்திகள்

கிங்ஸ் XI பஞ்சாப்

கடைசியாக பஞ்சாப் விளையாடிய போட்டியில் தோற்றதால் அணியில் சில மாற்றங்கள் நிகழும்.

ஆன்ரிவ் டை உடன் முஜுப் யுர் ரகுமான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணியில் எந்த மாற்றமின்று களமிறங்கும்.

நட்சத்திர வீரர்கள்

கிங்ஸ் XI பஞ்சாப்

ரவிச்சந்திரன் அஸ்வின்

கிறிஸ் கெய்ல்

ஆன்ரிவ் டை

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா

யுவராஜ் சிங்

ஜாஸ்பிரிட் பூம்ரா

உத்தேச XI

கிங்ஸ் XI பஞ்சாப்

கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், மயான்க் அகர்வால், டேவிட் மில்லர், சஃப்ரஸ் கான், மந்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின்(கேப்டன்), ஆன்ரிவ் டை, முஜீப் யுர் ரகுமான், முகமது ஷமி, ராஜ் பூட்.

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா(கேப்டன்), டிகாக், சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, மிட்செல் மெக்லகன், பூம்ரா, மலிங்கா, மயான்க் மார்கன்டே.

Quick Links