டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் ஏற்பட்ட சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக உள்ளூர் வீரர் இஷாந்த் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ஒப்பந்தம் ஆகினார். டெல்லி அணியின் முன்னணி பந்துவீச்சாளராக விளங்கிய ரபாடா காயத்தால் தொடரில் இருந்து விலகிய போதும், அவர் இல்லாத குறையை போக்கி அணியின் பந்துவீச்சு பணியை திறம்பட கையாண்டு வருகிறார், இசாந்த் சர்மா.
பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இஷாந்த் சர்மா வீசிய பந்தை பெங்களூர் கேப்டன் விராட் கோலி சந்தித்தார். அவர் பந்தை பேட்டில் உரசி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் சென்றது. விராத் கோலி ஆட்டமிழந்துள்ளார் என்று இசாந்த் சர்மா கூற, மூன்றாவது நடுவர் தீர்ப்பின்படி அவர் ஆட்டமிழக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப்பற்றி ஈ.எஸ்.பி.என். கிரிகின்ஃபோவிடம் இஷாந்த் சர்மா கூறியதாவது, "நான் அவர் பிடித்து விட்டார் என்று நினைத்தேன். அதன்பின்னர், விராட் கோலியிடம் நீ ஆட்டம் இழந்து விட்டாய், அதனால் நீ செல்லலாம் என்று கூறினேன். விராட் கோலி மீண்டும் என்னிடம் இல்லை, அது ஒன் பவுன்ஸ் ஆகியது. நீ மீண்டும் போய் பந்துவீசு என்று கூறினார். இறுதியில் நடுவரும் நாட் அவுட் என்று கூறிவிட்டார். பிறகு நான் வீசிய அடுத்த பந்தியில் விராட் கோலி சிக்சர் அடித்தார்.
இதேபோல், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மாவிடம் இதேபோன்று நடந்துள்ளார், இசாந்த் சர்மா. "நான் அவரிடம் அடி என்று கூறினேன். அவர் இது எந்த மாதிரியான விக்கெட் என்று கேள்வி எழுப்பினார். நான் எப்படி இதனை அடிக்க முடியும் என்றும் கேட்டார். உன்னால் மிகப்பெரியதாக அடிக்க முடியாது என்று ஆட்டம் முடிந்த பிறகு அவரிடம் நான் கூறினேன். மீண்டும் அவர், எங்கள் மைதானமான வான்கடே ஸ்டேடியத்திற்குள் வா என்று அழைத்தார். நான் மீண்டும் அவரிடம், ஆனால் நான் உன்னை வீழ்த்தி விட்டேன் என்று கூறினேன்".
இது போன்ற சுவாரசியமான தருணங்கள் எங்களிடம் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆம், நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாடினோம். ஆனாலும், இந்திய அணி தான் எங்களது முதல் குடும்பம். இதுவரை நடைபெற்றுள்ள 2019 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி ஒரு மெய்டன் ஓவர் உட்பட 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல் அணி மோத உள்ளது.