மே 9 அன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய 2019 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எலிமினேட்டர் சுற்றுடன் நடையைக் கட்டியுள்ளது. இந்த சீசனில் ஹைதராபாத் அணி ஒரு சீரான ஆட்டத்தை வெளிபடுத்த தவறியது. அத்துடன் பெரும்பாலான இடங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஹைதராபாத் அணி. தற்போது நடைபெற்று ஐபிஎல் தொடர் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவிற்கு மிகவும் சிறப்பாக அமைந்து உள்ளது.
இவ்வருட ஐபிஎல் சீசனில் கலீல் அகமதுவின் உடற்தகுதி சரியாக இல்லாததன் காரணமாக முதல் 6 போட்டிகளில் ஆடும் XI-ல் இவர் பங்கேற்கவில்லை. இவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக 2019 உலகக் கோப்பை அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் 21 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது பணியை திறம்படச் செய்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் இவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பவர்பிளேவில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அத்துடன் மிடில் ஓவரிலும் சில விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கலீல் அகமது 2019 ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் பங்கேற்று ஒரு ஓவருக்கு 8 எகானமி ரேட்டுடன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மோசமான ஐபிஎல் சீசனாக அமைந்திருந்தாலும், கலீல் அகமதுவிற்கு ஒரு சிறப்பான ஐபிஎல் சீசனாக அமைந்துள்ளது.
கலீல் அகமது தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்
எலிமினேட்டர் சுற்றின் 11வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது விக்கெட்டுகளை கலீல் அகமது வீழ்த்தினார். ஆனால் ரிஷப் பண்ட் தனது அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கை டெல்லி கேபிடல்ஸிற்கு சாதகமாக மாற்றினார். இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கானே வில்லியம்சன் பெரிய தவறு ஒன்றை கேப்டன் ஷீப்பில் செய்தார். 18வது ஓவரை கலீல் அகமது இருக்கும் போது பாசில் தம்பி-க்கு கானே வில்லியம்சன் அளித்தார். அந்த ஓவரில் ரிஷப் பண்ட் 22 ரன்களை விளாசி ஆட்டத்தையே மாற்றினார். போட்டி முடிந்த பிறகு கானே வில்லியம்சன், இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பௌலிங் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு பெரிய நெருக்கடியை அளித்ததாக புகழ்ந்து பேசினார். ஹைதராபாத் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்த உடனே அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் கலீல் அகமது என நியூசிலாந்தை சேர்ந்த கானே வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
கலீல் அகமது பற்றி கானே வில்லியம்சன் தெரிவித்துள்ளதாவது:
" கலீல் அகமது பவர்பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை வாய்ந்தவராக திகழ்கிறார். அத்துடன் மிடில் ஓவரிலும் இவரது பௌலிங் மிகச் சிறப்பாக உள்ளது. வாய்ப்பு கிடைத்த உடனே அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு மற்ற அணிகளுக்கு கடும் நெருக்கடியை தனது பௌலிங்கில் அளித்தார் கலீல் அகமது. டெல்லி அணியுடனான எலிமினேட்டர் சுற்றில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை உடனே மாற்றினார்."
கலீல் அகமது உலகக் கோப்பை அணியில் தேர்வாகவில்லை. வலைபயிற்சியில் இந்திய அணியின் பௌலராக மட்டும் கலீல் அகமது தேர்வாகியுள்ளார். நவ்தீப் சைனி, தீபக் சகார், அவேஷ் கான் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக பயிற்சி அளிப்பதற்காக பந்து வீச செல்ல உள்ளனர்.