இந்தியன் பிரிமியர் லீக்(ஐபிஎல்) 12வது சீசன் டி-20 தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலபரிச்சை செய்தது. இந்த ஐபிஎல் சீசனில் இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுனில் நரைன் இருவரும் களம் இறங்கினர்.
தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார் கிறிஸ் லிண். சுனில் நரைன் 2 ரன்னில் சான்ட்னர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய நிதிஸ் ராணா பந்தில் 21 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த உத்தப்பா ரன் எடுக்காமல் டக் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். கிறிஸ் லிண் அதிரடியாக அரைசதம் வீளாசினார்.
கிறிஸ் லிண் 82 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுடாக அடுத்து வந்த அதிரடி வீரர் ரஸல் அதே ஓவரில் சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அதே தாஹிர் ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். கார்த்திக் மற்றும் சுக்மான் கில் அடுத்தடுத்து விக்கெட்கள் இழக்க கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 161-8 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். பாப் டு ப்ளஸிஸ் 4 கேட்ச் பிடித்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு ப்ளஸிஸ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் ஷேன் வாட்சன் 6 ரன்னில் கர்னி பந்தில் அவுட் ஆகினார். பாப் டு ப்ளஸிஸ் 24 ரன்னில் நரைன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா நிலைத்து விளையாட அம்பத்தி ராய்டு 5 ரன்னில் சவுலா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து சவுலா பந்தில் அவுட் ஆகினார்.
இதை அடுத்து களம் இறங்கிய தோனி நிலைத்து விளையாடினார். தோனி 16 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா 19வது ஓவரில் ஹாட் ரிக் பவுண்டரிகள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.