ரஸல் மற்றும் ராணாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றி 

Pravin
ஆன்ட்ரூ ரஸல்
ஆன்ட்ரூ ரஸல்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12 வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் விளையாடிய முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி பல மாற்றங்களுடன் களம் இறங்கியது டேவிட் மில்லர் மற்றும் ஆண்ட்ரூ டை இருவரும் இந்த போட்டியில் களம் இறங்கினர்.

இதை அடுத்து முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 10 ரன்னில் கிறிஸ் லின் முகமது சமி பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 24 ரன்னில் ஹார்டஸ் வில்ஜியன் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து ஜோடி சேர்ந்த ராபின் உத்தாப்பா மற்றும் நிதிஷ் ராணா இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். சிக்ஸர் மழை பொழிந்தார் நிதிஷ் ராணா. 7 சிக்ஸர் 2 பவுண்டரிகளை வீளாசிய நிதிஷ் ராணா 63 ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்தில் அவுட் ஆகினார்.

நிதீஷ் ராணா
நிதீஷ் ராணா

அவரை அடுத்து ஆன்ட்ரெ ரஸல் களம் இறங்கினார். நிலைத்து விளையாடிய ராபின் உத்தாப்பா அரைசதம் வீளாசினார். மறுமுனையில் அதிரடி காட்ட தொடங்கிய ரஸல் சிக்ஸர்கள் வீளாசினார். ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த ரஸல் 17 பந்தில் 48 ரன்களை குவித்தார். நிலைத்து விளையாடிய உத்தாப்பா 67 ரன்களை வீளாசினார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 218 ரன்களை குவித்தது.

மயான்க் அகர்வால்
மயான்க் அகர்வால்

அதை அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிரிஸ் கெய்ல் மற்றும் லோகேஸ் ராகுல் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் ராகுல் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதை அடுத்து களம் இறங்கிய மயான்க் அகர்வால் நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடி காட்டிய கிரிஸ் கெய்ல் 20 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து களம் இறங்கிய சர்ஃப்ராஷ் கான் 13 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் நிலைத்து விளையாடினார். நிலைத்து விளையாடிய மயான்க் அகர்வால் 58 ரன்கள் எடுத்து பியுஷ் சாவ்லா பந்தில் அவுட் ஆகினார்.

டேவிட் மில்லர்
டேவிட் மில்லர்

அதன் பின்னர் களம் இறங்கிய மந்தீப் சிங் நிலைத்து விளையாட அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் அரைசதம் வீளாசினார். இருவரும் நிலைத்து விளையாடிய நிலையிலும் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி 14 ரன்கள் மட்டும் அடித்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

Quick Links

App download animated image Get the free App now