சாம் கர்ரன், கடைசி ஓவரில் ஹாட்-ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அசத்தல்

Pravin
சாம் கர்ரன்
சாம் கர்ரன்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் கடைசியாக விளையாடி லீக் போட்டி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் சாம் கர்ரன் இருவரும் களம் இறங்கினர்.

டேவிட் மில்லர்,சர்ஃப்ராஜ் கான்
டேவிட் மில்லர்,சர்ஃப்ராஜ் கான்

லோகேஷ் ராகுல் 15 ரன்னில் தொடக்கத்திலேயே கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். அவருடன் களம் இறங்கிய சாம் கர்ரன் அதிரடியாக விளையாடி 20 ரன்னில் சந்தீப் லமிச்சானே பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மயான்க் அகர்வால் 6 ரன்னில் ரன்அவுட் ஆகினார். தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் சர்ஃப்ராஜ் கான் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய சர்ஃப்ராஜ் கான் 39 ரன்னில் லமிச்சானே பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய டேவிட் மில்லர் 43 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய விலியன் 1 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த கேப்டன் அஸ்வின் 3 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய மந்தீப் சிங் 29 ரன்கள் எடுத்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 166-9 ரன்களை எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் களம் இறங்கினர். பிரித்திவ் ஷா முதல் பந்திலேயே அஸ்வின் பந்தில் டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் நிலைத்து விளையாடினார். ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்னில் விலியன் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ஷிகார் தவண் 30 ரன்னில் ரவிசந்திரன் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார்.

சாம் கர்ரன் ஹாட்-ரிக் விக்கெட்
சாம் கர்ரன் ஹாட்-ரிக் விக்கெட்

அடுத்து களம் இறங்கிய இங்கிம் மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்திய ரிஷப் பன்ட் 39 ரன்னில் சமி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய கிரிஸ் மோரிஸ் ரன் எடுக்காமல் ரன்அவுட் ஆகினார். அடுத்தாக நிலைத்து விளையாடிய இங்கிம் 37 ரன்னில் சாம் கர்ரன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ஹர்ஷல் படேல் அதே ஓவரில் டக் அவுட் ஆகினார். ஆட்டத்தின் போக்கையே மாற்றியது சாம் கர்ரன் வீசிய ஓவர். அடுத்து வந்த விஹாரி 2 ரன்னில் சமி பந்தில் அவுட் ஆகினார். அடுத்த ஓவர் வீசிய சாம் கர்ரன் ஹாட்-ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சாம் கர்ரன் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil