சுப்மான் கில்லின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது. 

Pravin
சுப்மான் கில்
சுப்மான் கில்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் கடைசி வார லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு லீக் போட்டியிலும் ஒரு அணிகள் தொடரை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த தொடரின் 52வது லீக் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் எந்த அணி தோல்வி அடைந்தாலும் தொடரை விட்டு வெளியேறும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கே.எல் ராகுல் 2 ரன்னில் வாரியர் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து கிறிஸ் கெய்லும் 14 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மயான்க் அகர்வால் மற்றும் நிக்கோலஸ் பூரண் இருவரும் சிறப்பாக விளையாடினர்.

நிக்கோலஸ் பூரண்
நிக்கோலஸ் பூரண்

அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரண் 27 பந்தில் 48 ரன்கள் அடித்து நிதிஸ் ராணா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த மந்திப் சிங் நிலைத்து விளையாடி மயான்க் அகர்வால் 36 ரன்னில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய சாம் கர்ரன் அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் சாம் கர்ரன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். கர்ரன் 24 பந்தில் 55 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்னில் அடித்தது.

கிறிஸ் லிண்
கிறிஸ் லிண்

அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் கிறிஸ் லிண் இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கிறிஸ் லிண் அதிரடியாக 22 பந்தில் 46 ரன்கள் அடித்து டை ஒவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ராபின் உத்தப்பா 22 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் வந்த ரஸல் அதிரடியாக 24 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

சுப்மான் கில்
சுப்மான் கில்

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சுப்மான் கில் அரைசதம் விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் 65 ரன்களுடன் களத்தில் இருந்தார். அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 21 ரன்கள் அடித்து அசத்தினார். கொல்கத்தா அணியில் இந்த போட்டியில் களம் இறங்கிய அனைத்து விரர்களம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை தக்கவைத்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now