இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டி மொஹாலி மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் இரண்டு லீக் போட்டிகள் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மும்பை இன்டியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ரோஷித் சர்மா மற்றும் குயிடன் டி காக் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்தே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். ரோஷித் சர்மா 32 ரன்னில் வில்யோன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் வந்த வேகத்தில் 11 ரன்னில் முருகன் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார்.
அடுத்து களம் இறங்கிய யுவராஜ் சிங் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் பவுண்டரிகளை வீளாசினார் குயிடன் டி காக் அரைசதத்தை கடந்த டி காக் 60 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய பொலார்ட் 7 ரன்னில் ஆண்ட்ரூ டை பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாட மறுமுனையில் யுவராஜ் சிங் 18 ரன்னில் முருகன் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய க்ருநால் பாண்டியா 10 ரன்னில் வில்யோன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஹர்டிக் பாண்டியா 31 ரன்னில் சமி பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 176 ரன்களை எடுத்தது.
அதன் பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் லோகேஸ் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் இருவரும் களம் இறங்கினர். கிறிஸ் கெய்ல் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து க்ருநால் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
மறு முனையில் ராகுல் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மயான்க் அகர்வால் 43 ரன்னில் க்ருநால் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் டேவிட் மில்லர் களம் இறங்கினார். நிலைத்து விளையாடிய ராகுல் அரைசதம் விளாசினார். அதன் பின்னர் இருவரும் நிலைத்து நின்று பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்தனர். ராகுல் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கே.எல் ராகுல் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் முலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் அணி.