ராஜஸ்தான் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி 

Pravin
பட்லர் வார்னிங் அவுட்
பட்லர் வார்னிங் அவுட்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12 சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் நான்காவது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஒரு வருட தடைக்கு பின்னர் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்தார் ஸ்டிவ் ஸ்மித். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிரிஸ் கெய்ல் மற்றும் லோகேஸ் ராகுல் இருவரும் களம் இறங்கினர்.

கிரிஸ் கெய்ல்
கிரிஸ் கெய்ல்

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே லோகேஸ் ராகுல் 4 ரன்னில் தவல் குல்கர்னி பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து மயான்க் அகர்வால் களம் இறங்கினார். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய மயான்க் அகர்வால் 22 ரன்னில் கிருஷ்ணப்பா கௌதம் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய சர்ஃபராஷ் கான் நிலைத்து விளையாட மறுமுனையில் சிக்ஸர் மழை பொழிந்த கிரிஸ் கெய்ல் அரைசதம் வீளாசினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய கிரிஸ் கெய்ல் 46 பந்தில் 8 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 12 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய சர்ஃபராஜ் கான் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சர்ஃபராஷ் கான் 46 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184-4 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் கேப்டன் ரஹானே இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ரஹானே 27 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடி சிக்ஸர்களை பறக்கவிட்டார் பட்லர். பட்லர் 43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் திறமையான முறையில் "பேக் அப்" ரன் அவுட் செய்தார். இது சர்ச்சையை கிளப்பும் வகையில் இருந்தது.

ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்

இதை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டிவ் ஸ்மித் அதிரடியாக 20 ரன்கள் அடித்து சாம் குரான் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து சாம்சன் 30 ரன்னில் சாம் குரான் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 6 ரன்னிலும், திரிபாதி 1 ரன்னிலும் முஜீப் உர் ரகுமான் பந்தில் அவுட் ஆகினர். இதை தொடர்ந்து வந்த ஆர்சர் 2 ரன்னிலும் உனாத்கட் 1 ரன்னிலும் அவுட் ஆக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links

Edited by Fambeat Tamil