இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் 22வது லீக் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதன் சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் மூன்று போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜேன்னி பேர்ஸ்டோ இருவரும் களம் இறங்கினர். கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த பேர்ஸ்டோ 1 ரன்னில் முஜிப் ரஹ்மான் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய விஜய் சங்கர் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் 26 ரன்னில் ரவிசந்திர அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய முகமது நபி 12 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அதற்கு பின்னர் வந்த மனிஷ் பான்டே 19 ரன்னில் முகமது சமி பந்து வீச்சில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் வீளாசினார். அதன் பின்னர் கடைசியில் களம் இறங்கிய தீபக் ஹுடா 3 பந்தில் 14 ரன்கள் வீளாசினார். 20 ஓவர்கள் முடிவில் ஐத்ராபாத் அணி 150 ரன்கள் எடுத்தது. ஐத்ராபாத் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 70 ரன்களை எடுத்தார்.
அதை அடுத்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் லோகேஸ் ராகுல் இருவரும் களம் இறங்கினர். கிறிஸ் கெய்ல் தொடக்கத்திலேயே 16 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய மயான்க் அகர்வால் லோகேஸ் ராகுல் உடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
நிலைத்து விளையாடிய இருவரும் அரைசதத்தை வீளாசினர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மயான்க் அகர்வால் 55 ரன்னில் சந்திப் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய டேவிட் மில்லர் 1 ரன்னில் சந்திப் சர்மா பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய மந்திப் சிங் 2 ரன்னில் சித்தார்த் கௌவுல் பந்தில் அவுட் ஆகினார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வலுவான நிலையில் இருந்து மோசமான நிலைக்கு சென்ற நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைபட்ட நிலையில் கே.எல்.ராகுல் பவுண்டரி வீளாசி வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை கே.எல்.ராகுல் பெற்றார்.