ஐபிஎல் 12 -வது சீசன் மிகவும் அற்புதமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இதுவரை 32 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகள் தங்களுடைய இரண்டாவது மோதலை சந்திக்கின்றனர். பெங்களூரு ஈடன் கார்டன்சில் 2017 இல் இருந்து இதுவரை மூன்று முறை தோல்வி அடைந்துள்ளது கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மேலும், வெற்றியை நோக்கிய பயணமாக இன்று களமிறங்க உள்ளது. நன்றாக விளையாடிய போதிலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் பெருமளவு தோல்வியையே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூரு தோல்வியைத் தழுவுமேயானால் பிளே ஆஃபில் விளையாட வாய்ப்புகள் இல்லை. இன்று விராத் கோலி, டிவில்லியர்ஸ் விளாச வாய்ப்புள்ளதா? அல்லது தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பையில் இடம் பெற்றதற்கு பார்ட்டி வைப்பாரா? இன்றைய போட்டியின் சுவாரசியமான அந்த மூன்று தகவல்களை பற்றி காண்போம்.
#3. கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை வீழ்த்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பவுலர்களின் தந்திரம்:
கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் -இன் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன். இதன் பின்னர், நிதீஷ் ராணா மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் களம் இறங்குவர். இவர்கள் எப்படிப்பட்ட ஒரு இலக்கையும் எளிதாக எட்டக்கூடிய கூட்டணியாகும். இந்த அசாத்திய கூட்டணிகளை உடைப்பதன் மூலம் பெங்களூருவின் வெற்றி வாய்ப்பானது அதிகரிக்கக்கூடும். எனவே, இது பெங்களூரு அணியின் பவுலர்கள் கையில்தான் உள்ளது.
#2. ஸ்டெயின் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி கூட்டணி:
காயம் காரணமாக ஓய்விலிருந்த ஸ்டெயின், தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்துள்ளார். இவர் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட உள்ளார். மேலும், இவர் ஐபிஎல் போட்டிகளில் தனது பார்மை தக்க வைப்பதன் மூலம் இவரது பங்களிப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கு நிச்சயமாக வெற்றியை தேடித்தரும். ஒரு முறை இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோருடன் விளையாடுவது மகிழ்ச்சி தருவதாகும் RCB அணியில் இருப்பதற்காகப் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
#1. ஆண்டிரு ரசல்:
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆண்டிரே ரசல் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் வெளிப்படுத்தி வருகின்றார். சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து அணிகளுக்கும் போட்டியாக அமைந்த இவர், பெங்களூரு அணிக்கும் பெரும் சவாலாக இருப்பார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும், இவர் தற்போது பயிற்சி ஆட்டத்தின் போது தோள்பட்டையிலும் தன்னுடைய இடது கை முட்டியிலும் காயம் கண்டுள்ளார்.
இவர் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறுவதில் சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், இவர் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பேட்டிங் மட்டுமல்லாது பவுலிங்கிலும் இவர் கைதேர்ந்தவர் என்பது சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாகும்.