எதிர்வரும் 13வது ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் "பிரென்டன் மெக்கல்லம்" நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கரேபியின் பீரிமியர் லீக் தொடரில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் பொறுப்பேற்றார்.
சமீபத்தில் கனடா குளோபல் டி20 தொடரில் "டொர்னாட்டோ நேஷன்" அணியில் விளையாடி வந்த 37 வயதான மெக்கல்லம் இத்தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். 2016ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் உலகெங்கும் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் மட்டும் பங்கேற்று வந்தார். இந்தியன் பிரீமியர் லீக், பங்ளாதேஷ் பிரீமியர் லீக், பிக்பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகிய தொடர்களில் விளையாடி வந்தார். அதன்பின் மீண்டும் 2012-13லும் இந்த அணிக்காக விளையாடியுள்ளார்.
மிகவும் அதிரடி ஆட்டக்காரரான மெக்கல்லம் முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 158 ரன்களை குவித்தது தற்போது வரை ஐபிஎல் வரலாற்றில் யாரலும் மற்க்க முடியாத பேட்டிங்காக திகழ்கிறது. இவர் 2008 முதல் 2010 வரை கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.
குளோபல் டி20 தொடருக்கு ஓய்வு பெற்ற பின் "வர்ணணை மற்றும் பயிற்சியாளராக செய்ல்படப்போவதாக தெரிவித்திருந்தார்." இவரின் தெரிவித்தபடி செப்டம்பர் 4 அன்று தொடங்க உள்ள கரேபியன் பிரீமியர் லீக் தொடரின் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தற்போது கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மெக்கல்லம் தெரிவித்ததாவது: "இந்த மிகப்பெரிய பொறுப்பை எனக்கு அளித்ததை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியும், சிபிஎல் தொடரில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியும் ஒரு சிறந்த அணிகளாக டி20 லீக்கில் உள்ளது. இரு அணிகளும் அந்தந்த டி20 தொடர்களில் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளன. மேலும் இரு அணிகளின் துணை பயிற்சியாளர்களுடனும் நான் பனியாற்றியுள்ளேன். எனவே இந்த தருணம் எனக்கு பெரும் அனுபவத்தை ஏற்படுத்தும்"
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் நிர்வாகத் தலைவர் வென்கி மைசூர் தெரிவித்துள்ளதாவது: "பிரென்டன் மெக்கல்லம் நைட் ரெய்டர்ஸ் அணியின் முக்கிய உறுப்பினராக நீண்ட காலமாக இருந்துள்ளார். இவரது தலைமை பண்பு, சாதனை, அதிரடி மற்றும் நற்பன்பு மற்றும் பொறுப்பான போன்றவை இயல்பாகவே தன்னிடத்தில் கொண்டிருப்பவர். அத்துடன் தான் விளையாடும் அணிக்கு தனது சிறந்த ஆட்டத்தை அளிப்பவர். இதனை வைத்தே இவரை கொல்கத்தா மற்றும் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணிகளின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்".
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக 2015 முதல் இருந்த காலீஸ்-வும், டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக சைமன் காட்டிச்-வும் இருந்தனர். தற்போது இரு அணிகளின் பயிற்சியாளராகவும் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். சைமன் காட்டிச் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்