சென்னை அணியை வீழ்த்தி 100வது வெற்றியை அடைந்தது மும்பை இன்டியன்ஸ் அணி

Pravin
ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு முக்கியமான அணிகள் மோதுவதால் இந்த போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் ரோஷித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் இருவரும் களம் இறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குயிடன் டி காக் 4 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் நிலைத்து விளையாடினார். கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்னில் ரவிந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய யுவராஜ் சிங் 4 ரன்னில் இம்ரான் தாஷிர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தடுத்து விக்கெட் இழக்க அடுத்து வந்த க்ருனால் பாண்டியா நிலைத்து விளையாடினார். இருவரும் நான்காவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்தனர். க்ருனால் பாண்டியா 42 ரன்னில் மோஹிட் சர்மா பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய சூரியகுமார் யாதவ் 59 ரன்னில் பிராவோ பந்தில் அவுட் ஆகினார்.

சூரியகுமார் யாதவ்
சூரியகுமார் யாதவ்

அதன் பின்னர் களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா மற்றும் பொலார்டு இருவரும் கடைசி ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கடைசி ஓவரில் 29 ரன்களை வீளாசினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இன்டியன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் அம்பத்தி ராய்டு மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் களம் இறங்கினர். அம்பத்தி ராய்டு முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வாட்சன் 5 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா 16 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார்.

கேதார் ஜாதவ்
கேதார் ஜாதவ்

அடுத்து ஜோடி சேரந்த தோனி மற்றும் கேதார் ஜாதவ் இருவரும் நிலைத்து விளையாடினர். பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய மகேந்திர சிங் தோனி 12 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ரவிந்திர ஜடேஜா 1 ரன்னில் அதே ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் இறங்கிய பிராவோ நிலைத்து விளையாடினார். நிலைத்து விளையாடிய கேதார் ஜாதவ் 58 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து அதே ஓவரில் பிராவோ 8 ரன்னில் அவுட் ஆகினார்.

மும்பை இன்டியன்ஸ் அணி
மும்பை இன்டியன்ஸ் அணி

அடுத்து வந்த தீபக் சஹார் 7 ரன்னில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 133 ரன்களை எடுத்தது. மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஹர்டிக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links