பொலார்டின் அதிரடியில் மும்பை அணி திரில் வெற்றி 

Pravin
பொலார்ட்
பொலார்ட்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் தொடரின் 24வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை அவர்க்கு பதிலாக பொலார்ட் கேப்டனாக விளையாடினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

அதன் படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 116 ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கருண் நாயர் 5 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

அதன் பின்னர் வந்த சாம் கர்ரன் 8 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கே.எல். ராகுல் சதம் வீளாசிய அசத்தினார். இது அவரது முதல் ஐபிஎல் சதம் ஆகும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்னில் குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய மும்பை இன்டியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் சித்தார்த் லாட் இருவரும் களம் இறங்கினர். சித்தார்த் லாட் 15 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 21 சாம் கர்ரன் பந்தில் அவுட் ஆக குயிடன் டி காக் 24 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த கிரன் பொலார்ட் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார். அதன் பின்னர் வந்த இஷான் கிஷன் 7 ரன்னில் சாம் கர்ரனிடம் ரன்அவுட் ஆகினார். அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடி 19 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆகினார்.

பொலார்ட்
பொலார்ட்

அடுத்து வந்த க்ருனால் பாண்டியா அதே முகமது சமி பந்தில் 1 ரன்னில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய பொலார்ட் சிக்ஸர் மழை பொழிந்தார். பொலார்ட் உடன் இணைந்து விளையாடிய அல்ஜாரி ஜோசப் நிலைத்து விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக விளையாடிய கேப்டன் பொலார்ட் 31 பந்தில் 83 ரன்களை குவித்தார். இவரின் அதிரடி ஆட்டம் கடைசி ஓவரில் முடிவுக்கு வந்தது.

நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கிரன் பொலார்ட் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். நான்கு பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பொலார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now