பெங்களுரு அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற சாதனையை படைத்தது மும்பை அணி 

Pravin
ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 31வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. எற்கனவே இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு முறை மோதியது அந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் மற்றும் வீராட் கோலி இருவரும் களம் இறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீராட் கோலி 8 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய டி வில்லியர்ஸ் நிலைத்து விளையாட அதிரடி காட்டிய பார்த்திவ் படேல் 28 ரன்னில் ஹர்டிக் பாண்டிய பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து ஜோடி சேர்ந்த மோயின் அலி மற்றும் டி வில்லியர்ஸ் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக வீளாசினர். இதை தொடர்ந்து அதிரடி காட்டிய மோயின் அலி அரைசதம் வீளாசினார். மோயின் அலி 50 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் வேகம் குறைந்தது.

மோயின் அலி
மோயின் அலி

அதன் பின்னர் வந்த ஸ்டோனிஸ் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 75 ரன்னில் பொலார்டிடம் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து வந்த வீரர்கள் மலிங்காவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 171 ரன்கள் எடுத்தது.

டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்

இதை அடுத்து விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடினர். டி காக் சிக்ஸர் மழை பொழிந்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் இவர்களின் விக்கெட்களை வீழ்த்த சுழல் பந்து வீச்சாளர் மோயின் அலி வந்த தனது முதல் ஓவரிலேயே இருவரையும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க செய்தார். டி காக் 40 ரன்னிலும், ரோஹித் சர்மா 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஜோடியின் விக்கெட்களை சஹால் அடுத்தடுத்து வீழ்த்தினார்.சூரியகுமார் யாதவ் 29 ரன்னிலும், இஷான் கிஷன் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். அதன் பின்னர் வந்த பாண்டியா பிரதர்ஸ் நிலைத்து விளையாடினர்.

ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா

19வது ஓவரில் ஹர்டிக் பாண்டியா 6,4,4,6 வீளாசி மும்பை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். மும்பை இன்டியன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now