கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற மும்பை இன்டியன்ஸ் அணி

Pravin
மும்பை இன்டியன்ஸ் அணி
மும்பை இன்டியன்ஸ் அணி

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் தங்களின் முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்யும் என்பதில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஷித் சர்மா இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். டி காக் 23 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் நிலைத்து விளையாடினார். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 48 ரன்னில் உமெஷ் யாதவ் பந்தில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் களம் இறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். ஆனால் அதே ஓவரில் சஹால் பந்தில் 23 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த பொலார்ட் 5 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். தொடர்ந்து விக்கெட்கள் சரிந்த நிலையில் அடுத்து களம் இறங்கிய க்ருநால் பாண்டியா 1 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். 14 பந்தில் 32 ரன்களை குவித்தார் ஹர்டிக் பாண்டியா. 20 ஓவர்கள் முடிவில் மும்பை இன்டியன்ஸ் அணி 187-8 ரன்களை குவித்தது.

வீராட் கோலி
வீராட் கோலி

அதன் பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் மற்றும் மோயின் அலி இருவரும் களம் இறங்கினர். மோயின் அலி 13 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய பார்த்திவ் படேல் 31 ரன்னில் மார்கண்டே பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். வீராட் கோலி 46 ரன்களை எடுத்த போது ஐபிஎல் போட்டியில் 5000 ரன்களை கடந்தார். டி வில்லியர்ஸ் இந்த போட்டியில் 20 ரன்கள் எடுத்த போது ஐபிஎல் போட்டியில் 4000 ரன்களை கடந்தார்.

டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்

கோலி 46 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் வெற்றி நோக்கி தனிநபராக கொண்டு சென்ற நிலையில் 6 பந்திகளில் 17 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில் பெங்களுரு அணி 11 ரன்களை மட்டும் அடித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை இன்டியன்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றி இதுவாகும். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கு வழங்கபட்டது.

Quick Links

Edited by Fambeat Tamil