தற்போது ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் கிட்டத்தட்ட முடிவு பெறும் நிலையில் உள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதவுள்ளது. இதில் எந்த அணி தனது நான்காவது கோப்பையைக் கைப்பற்றும் என்பதனைக் காண அனைவரும் ஆவளுடன் உள்ளனர். இந்நிலையில் லீக் சுற்றின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியை மும்பை அணி வெற்றி பெற்ற பின் மும்பை வீரர்கள் உலகிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட மும்பை ரசிகர்களுக்கு நன்றி என கொடியை சுமந்து சென்றனர். இதன் பின் யார் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்பதில் சமூக வலைதளங்களில் அனைத்து அணி ரசிகர்களும் வாதங்களை துவங்கினர். குறிப்பாக சென்னை மற்றும் மும்பை அணி ரசிகர்களுக்கிடையே அதிக வாக்குவாதம் நடந்தது எனக் கூறலாம். இந்நிலையில் தற்போது எந்த அணி தான் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்டது என்பதை இந்த தொகுப்பில் காணலாம். இதன் முடிவு உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம்.
#3) சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்த வரிசையில் சென்னை அணி மூன்றாவது இடத்தில் உள்ளது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம். ஆம் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் அனைவராலும் உபயோகிக்கப்படுவது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இண்ஸ்டாகிராம் தான். அதில் அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கென தனிப் பக்கத்தை கொண்டுள்ளது. அதில் பலர் சென்னை அணியை பின்தொடரிகின்றனர். சென்னை அணியை சமூக வலைதளங்களில் பின்தொடர்வோர் விவரம்.
பேஸ்புக் – 12.6 மில்லியன்
ட்விட்டர் – 4.8 மில்லியன்
இன்ஸ்டாகிராம் – 2.9மில்லியன்
#2) மும்பை இந்தியன்ஸ்
இநத வரிசையில் இரண்டாம் இடம் வகிப்பது மும்பை இந்தியன்ஸ் அணி. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் இரண்டிலும் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட மும்பை அணி பேஸ்புக்கில் 13.38 மில்லியன் ரசிகர்களை மட்டுமே கொண்டதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் முழு விவரம்.
பேஸ்புக் – 13.38 மில்லியன்
ட்விட்டர் – 5.1 மில்லியன்
இன்ஸ்டாகிராம் – 3.1 மில்லியன்
#1) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்த வரிசையில் முதலிடத்தை தன்வசமாக்குவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான். இது உங்களுக்கு சற்று அதிர்ச்சி அளிக்கலாம். மொத்தத்தில் கொல்கத்தா அணி சமூக வலைதளங்களில் 22.09 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. இது மும்பை அணியை விட 0.51 மில்லியன் அதிகமாகும். சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் விவரம்.
பேஸ்புக் – 16.69 மில்லியன்
ட்விட்டர் – 4.2 மில்லியன்
இன்ஸ்டாகிராம் – 1.2 மில்லியன்
பேஸ்புக்கில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டதே கொல்கத்தா அணியை இந்த வரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த வரிசையில் முறையே பெங்களூர் அணி மொத்தம் 15.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் நான்காம் இடத்திலும், கிங்ஸ் XI பஞ்சாப் அணி 11.64 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.
( குறிப்பு: இது 2019 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. )