ஐபிஎல் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த பருவத்தின் முதல் வர்த்தகத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மயங்க் மார்க்கண்டேவை டெல்லியிடம் கொடுத்து ரூதர்ஃபோர்டை மும்பை அணி வாங்கியது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 2020 சீசனில் ஐபிஎல் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள தங்கள் அணியை வலுப்படுத்த வேண்டும். யுவராஜ் சிங் சமீபத்தில் ஓய்வு பெற்றதன் காரணமாக சில இடங்களை நிரப்பும் சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. மும்பை அணிக்கு மேலும் வலு சேர்க்க அவர்கள் ஆல்ரவுண்டர் மற்றும் ஒரு வெளிநாட்டு வேக பந்து வீச்சாளர்கள் மீது முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்கள் ஐந்தாவது முறையாக ஐபில் பட்டத்தை வெல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வர்த்தக பரிமாற்றம் மூலம் வாங்க முயற்சிக்க வேண்டிய இரண்டு வீரர்களை பற்றி இங்கே பார்ப்போம்.
# 1 சிவம் துபே :
சிவம் துபேவை 2019 ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. சென்ற வருடம் ஏலத்திற்கு முன்பு அவர் உள்ளூர் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் பிரவின் தாம்பே ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆர்.சி.பி அவரை ஏலத்தில் 5 கோடிக்கு வாங்கியது என்பது குறிப்படத்தக்கது. இருப்பினும், அவர் 2019 சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை . எனவே அவரை ஆர்.சி.பி. விடுவிக்கும் பொழுது மும்பை பிடிக்க முயற்சிக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்க முயற்சி செய்ய வேண்டும். மும்பை புதுமுக வீர்கள் வாங்கி அவர்களை தேசிய அளவில் பிரபலமடைய செய்வதில் கை தேர்ந்தவர்கள். மும்பை ஏற்கனவே பொல்லார்ட் மற்றும் பாண்டியா சகோதரர்கள் போன்ற ஆல்ரவுண்டர்களை தன் வசம் வைத்துள்ளனர். மேலும் மும்பை அணிக்கான ராஞ்சி போட்டியில் இவர் விளையாடி வருவதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அது மேலும் வலுசேர்க்கும்.
# 2 ட்ரெண்ட் போல்ட்:
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டெல்லி அணிக்காக 2019 சீசனில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை நீங்கள் ஒப்பீடு செய்து பார்க்கும் பொழுது அவர் கடந்த சீசனில் தனது முழு திறமையும் வெளிபடுத்தவில்லை என்றே கூற வேண்டும். அவர் ஒரு திறமை மிக்க இடக்கை வேகபந்து வீச்சாளர் . டெல்லி அவரை விடுவிக்க முடிவு செய்தால், மும்பை அவரை வர்த்தக பரிமாற்றம் மூலம் வாங்க முயற்சிக்க வேண்டும். மலிங்கா சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், 2020 சீசனில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே மும்பை இளம் சர்வதேச வேகப்பந்து வீச்சாளர்கள் மீது முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். மும்பையில் ஏற்கனவே இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர், அவர்கள் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டனர். எனவே வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பது மோசமான யோசனையாக இருக்காது.