இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

India's New Batting Coach
India's New Batting Coach

தற்போது இந்திய பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பங்கருக்கு பதிலாக, இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம் ரத்தூர் புதிய பேட்டிங் பயிற்சியாளராக எம்.எஸ்.கே பிரசாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தேர்வுக் குழு உருவாக்கிய 14 பேர் கொண்ட தரவரிசையில், விக்ரம் ரதூர் முதலிடத்திலும், சஞ்சய் பங்கர் மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மார்க் ராம் பிரகாஷ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் வகித்தனர்.

ரத்தூர் இரு வருடங்களுக்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மண்ணில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து 2021 டி20 உலகக்கோப்பை வரை ரத்தூர் இந்திய பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாந்த் புதிய பேட்டிங் பயிற்சியாளர் குறித்து கூறியதாவது,

"விக்ரம் ரத்தூர் ஹீமாச்சல் பிரதேச கிரிக்கெட் அசோசியேசனின் இயக்குநராக உள்ளார். மேலும் பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசனின் பயிற்சியாளராகவும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் துணை பயிற்சியாளரகவும் வலம் வந்துள்ளார். எனவே இவர் போதுமான அளவு அனுபவத்தை கொண்டுள்ளார். இதைத்தவிர தேசிய கிரிக்கெட் அகாடமி-யில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த சிறப்பான திறனை இந்திய பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட போதுமானதாகும். இதனால்தான் விக்ரம் ரத்தூருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது."

விக்ரம் ரத்தூர் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை. 6 டெஸ்ட் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் கண்டுள்ளார். இது ஒரு பெரும் கண்டனமாக ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால் ஜலந்தூரைச் சேர்ந்த இவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்வில் உள்ளூர் கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்துள்ளார். 146 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 11,473 ரன்களை விளாசியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்!

1996ல் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணியில் விக்ரம் ரத்தூர் இடம்பெற்றிருந்தார். இந்த அங்கிகரிக்கப்படாத தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 58.38 சராசரியுடன் 759 ரன்களை குவித்தார். குறிப்பாக ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் நடந்த "வொர்செஸ்டர்ஷைர்"அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 165 ரன்களை குவித்தார்.

இதே ஆட்டத்தை சர்வதேச போட்டிகளில் வெளிபடுத்த தவறினார் விக்ரம் ரத்தூர். 4 டெஸ்ட் இன்னிங்ஸில் களம் கண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் அவரது அதிகபட்ச ரன்கள் 20 ஆகும். வெளியே செல்லும் ஸ்விங் பௌலிங்கை சரியாக எதிர்கொள்ளாமல் சொதப்பி தேர்வுக்குழுவை கவர தவறவிட்டார்.

இதற்கு பின்னர் 1996-97ல் நடந்த தென்னாப்பிரிக்கா தொடரிலும் சொதப்பினார். 2002-03ல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

கிரிக்கெட் ஓய்வைத் தொடர்ந்து 7 வருடங்கள் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார். அதன்பின் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராகவும், 2012 செப்டம்பரில் இந்திய தேர்வுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். சந்தீப் படீல் தலைமையிலான மூத்த தேர்வுக் செலக்ஷன் கமிட்டியில் 2016 வரை இடம்பெற்றிருந்தார் விக்ரம் ரத்தூர்.

Quick Links

Edited by Fambeat Tamil