இந்தியாவில் 2008 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இதுவரை ஐபிஈல் தொடர் 12 சீசன்களை கடந்து தற்போது 13 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடர்.துவங்கபட்ட ஆண்டில் பல பாகிஸ்தான் வீரர்களும் பல அணிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடினர். ஆனால் அடுத்த ஆண்டிலேயே சில அரசியல் காரணங்களிலால் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை செய்யப்பட்டது. இருந்த போதிலும் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் விளையாடியுள்ள சில பாகிஸ்தான் வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1) ஷாகித் அப்ரிடி
பாகிஸ்தான் அணியின் சிறந்த அதிரடி வீரராக இன்றளவும் பாகிஸ்தான் ரசிகர்கள் கூறப்பட்டு வரும் வீரர் ஷாகித் அப்ரிடி தான். அதற்கு காரணம் 17 வயதிலேயே பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தனது அதிரடியால் பல போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்தார். இவர் 2007 ஆம் ஆண்டு டெக்கான் சார்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடினார். ஆனால் இவர் அந்த சீசன் முழுவதும் 81 ரன்கள் மட்டுமே குவித்தார். இவரின் சராசரி 10.12 தான். ஆனால் பந்துவீச்சில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் அப்ரிடி.
#2) யூனிஸ் கான்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான யூனிஸ் கான் 2008 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் சாம்பியனான ராஜஸ்தான் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த தொடரில் மேசமாகவே விளையாடினார் இவர். ஷேன் வார்னே தலைமையில் ஸ்மித், யூசுப் பதான், மார்ட்டின் மற்றும் வாட்சன் என சிறந்த புட்டிங் ஆர்டரைக் கெண்டிருந்தது ராஜஸ்தான் அணி. இதில் யூனிஸ் கானுக்கு லீக்கில் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் இவரது மோசமான ஆட்டத்தினால் அதன் பின் இவருக்கு அணியில் விளையாட வாய்ப்பளிக்கப்படவே இல்லை.
#3) மிஸ்பா-உல்-அக்
இவரின் பெயரைக் கேட்டதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது 2007 டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான இவரது சிறந்த ஆட்டமே. இதனால் இவர் பெங்களூர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அனில் கும்பிளே தலைமையிலான பெங்களூர் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கினார் இவர். மொத்தம் 8 போட்டிகளில் விளையாடிய இவர் வெறும் 117 ரன்கள் மட்டுமே குவித்தார். இவரது ஸ்ரைக்ரேட் வெறும் 81 தான். அதுவும் இவர் கடைசியாக விளையாடி போட்டியில் மும்பை அணிக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
#4) ஷோகில் தன்வீர்
இடது கை மிதவேக பந்துவீச்சாளரான தன்வீர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். இதில் முதல் ஐபிஎல் தொடரின் ஊதா தொப்பியின் வெற்றியாளரும் இவரே. அந்த தொடரில் சென்னை அணிக்கு எதிராக இவரின் 6/14 என்ற பந்துவீச்சு 12 ஆண்டுகளாக யாராளும் முறியடிக்க முடியாததாகவே விளங்கியது. ஆனால் தற்போதைய ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் வீரர் அல்ஜாரி ஜோசப் இந்த சாதனையை தற்போது தகர்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த தொடரில் தன்வீர் 11 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணி கேப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார்.
மற்ற வீரர்களின் பற்றிய தொகுப்பினை அடுத்த பாகத்தில் காணலாம்.