ஐபிஎல் தொடரில் சதம் என்பது அதிகம் வெளிப்படுவதில்லை. நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் விளையாடும் ஐபிஎல் தொடரில் சதங்கள் என்பது ஒரு சில வீரர்களால் மட்டுமே விளாசப்பட்டு உள்ளது. விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை குவித்து உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த 12 தொடர்களில் 55 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரில் 2 வீரர்கள் 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர். நாம் இங்கு நூழிலையில் தங்களது சதங்களை இழந்த 2 கிரிக்கெட் வீரர்களை பற்றி காண்போம்
குறிப்பு: சுரேஷ் ரெய்னா 2013 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 99 ரன்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
#1 விராட் கோலி (டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 99 ரன்களில் ரன் அவுட்)
2013 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்களில் இருந்தார். ஆட்டத்தின் இறுதி பந்து வீசப்பட்டபோது ரன் அவுட் ஆகினார். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனின் அதிரடியால் 20 ஓவர்களில் 183 ரன்களை குவித்தது.
ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது தொடக்க விக்கெட்டுகளை இழந்தது. விராட் கோலி மற்றும் மொய்ஸஸ் ஹென்றிக்யுஸ் சேர்ந்து 50 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து பெங்களூரு அணியின் ஆட்டத்தை தொடங்க ஆரம்பித்தனர். ஹென்றிக்யுஸிற்குப் பிறகு களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியுடன் இனைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.
உமேஷ் யாதவ் வீசிய கடைசி 2 ஓவர்களில் 47 ரன்கள் பெங்களூரு அணியால் குவிக்கப்பட்டது. 19 ஓவர்கள் வரை விராட் கோலி 76 ரன்களில் இருந்தார். கடைசி ஓவரில் முதல் 5 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விராட் கோலியால் விளாசப்பட்டது. கடைசி பந்தில் இரண்டாவது ரன் ஓட்டத்தை எடுக்க முயன்ற போது விராட் கோலி ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன்னில் தனது சதத்தை தவறவிட்டார்.
#2 பிரித்வி ஷா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 99 ரன்களில் அவுட்)
இந்நிகழ்வு தற்போது நடைபெற்று வரும் 2019 ஐபிஎல் தொடரில் நடந்தது. கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் இளம் வீரர் பிரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த போது 99 ரன்களில் அவுட்டாக்கப்பட்டார்.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 184 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் (36 பந்துகளில் 50 ரன்கள்) மற்றும் ஆன்ரிவ் ரஸல் (28 பந்துகளில் 68 ரன்கள்) அதிரடியாக விளையாடினர்.
186 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிரித்து ஷா ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். கொல்கத்தா அணி பௌலர்களின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டார் பிரித்வி ஷா. சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டிலும் சிறப்பாக அசத்திய இவர் 30 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
19வது ஓவரில் லாக்கி பெர்குசன் வீசிய பந்தில் பிரித்வி ஷா 99 ரன்களில் இருந்த போது ஒரு பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து தினேஷ் கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப் பட்டார். 55 பந்துகளில் இவர் அடித்த 99 ரன்களால் டெல்லி கேபிடல்ஸ் அணி வெல்லும் தருவாயில் இருந்தது. ஆனால் குல்தீப் யாதவ் வீசிய கடைசி ஓவர் சிறப்பாக இருந்ததால் 185 ரன்கள் அடித்து டெல்லி கேபிடல்ஸ் டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
சூப்பர் ஓவரில் காகிஸோ ரபாடா வீசிய சிறப்பான யார்க்கரால் 10 ரன்களுக்கு சுருண்டது கொல்கத்தா அணி. டெல்லி கேபிடல்ஸ் மிகவும் எளிதாக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் சதமடித்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை தவறவிட்டார் பிரித்வி ஷா.