ஐபிஎல் வரலாற்றில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 4வது இந்தியாராக சமீபத்தில் இனைந்துள்ளார் சஞ்சு சாம்சன். மார்ச் 29 அன்று ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய 2வது ஐபிஎல் சதத்தை அடித்தார். இவர் தனது அதிரடி ஆட்டத்தை ரகானேவுடன் சேர்ந்து வெளிபடுத்தினார்.
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் ரகானேவுடன் இனைந்து இந்த போட்டியில் 119 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 198 ரன்கள் என்ற சிறப்பான இலக்கை ஹைதராபாத்திற்கு நிர்ணயித்தது. சஞ்சு சாம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இனைந்து கடைநிலையில் அதிவேக 64 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடியதாலே ராஜஸ்தான் அணியால் அந்த இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. ஆனால் இவரது இந்த அதிரடி வீண் ஆனது. வார்னர் அதிரடியால் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சன் 2017 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக் விளையாடிய போது ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசியது குறிப்பிடத்தக்கது. 2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் பங்கேற்று 441 ரன்களை விளாசினார். 2013 முதல் 2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரராக சஞ்சு சாம்சன் இருந்துள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை விளாசியுள்ளார். 2016 ஐபிஎல் தொடரில் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு 4 சதங்களை விளாசியுள்ளார். அத்துடன் அத்தொடரில் 16 போட்டிகளில் 973 ரன்களை குவித்து பெங்களூரு அணியை இறுதிபோட்டிக்கு அழைத்துச் சென்றார்.
2010 ஐபிஎல் தொடரில் முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 56 பந்துகளில் 127 ரன்களை குவித்தார். அத்துடன் 2012 ஐபிஎல் தொடரில் மே 25 அன்று நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் 58 பந்துகளில் 113 ரன்களை விளாசினார்.
இவர்களுடன் விரேந்திர சேவாக்கும் ஐபிஎல் தொடரில் 2 சதங்களை விளாசியுள்ளார். 2011 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய போது, டெகான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 56 பந்துகளில் 119 ரன்களை எடுத்தார். 2014 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளைமாடிய போது, மே 30 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை விளாசினார் சேவாக்.
கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் 6 சதங்களை விளாசி முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி மற்றும் ஷேன் வாட்சன் 4 சதங்களுடன் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.டேவிட் வார்னர் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் 3 சதங்களுடன் 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.